Advertisment

பழங்குடியின சிறுவனிடம் தனது செருப்பை கழற்றச் சொன்ன திண்டுக்கல் சீனிவாசன்

Advertisment

முதுமலை புலிகள் காப்பகத்தில் வளர்ப்பு யானைகள் நலவாழ்வு முகாமை துவக்கி வைக்க வந்த வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், அங்கிருந்த பழங்குடியினர் சிறுவனை அழைத்து தனது காலில் இருந்த செருப்பை கழட்டி விடுமாறு கூறினார். அமைச்சர் தனது செருப்பை கழற்ற சொன்னதால் அங்கிருந்த பத்திரிகையாளர்கள் இதனை படம் பிடித்தனர். மேலும் வீடியோ எடுத்தனர். படம் மற்றும் வீடியோ எடுப்பதை அமைச்சருடன் வந்தவர்கள் மறைத்தனர். இந்த சம்பவம் வாட்ஸ் அப் மற்றும் சமூக வலைதளங்களில் பரவியது. சிறுவனை செருப்பு கழட்ட சொன்ன அமைச்சருக்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

AIADMK MLA minister Dindigul Sreenivaasan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe