Advertisment

"இனிமே நான் எந்த ஊர் போனாலும் வந்து, என்னை போட்டோ எடுத்து செய்தி போடணும்" - பெண் எம்எல்ஏ கிண்டல்!!

admk

Advertisment

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைரோடு அருகே மாவூர் கண்மாய் பாசன கால்வாயில் ரூபாய் 60 லட்சம் செலவில் குடிமராமத்து பணிக்கான பூமி பூஜை விழா நடைபெற்றது. இதில் நிலக்கோட்டை அதிமுக எம்எல்ஏ தேன்மொழி சேகர் கலந்து கொண்டு பூமி பூஜை செய்தார். இதில் எம்எல்ஏவின் கணவரும் அதிமுக நகர செயலாளருமான சேகர், ஒன்றிய செயலாளர் யாகப்பன் மற்றும் பொதுப் பணித்துறை அதிகாரிகள், விவசாய சங்கத்தினர் பூஜையில் பங்கேற்றனர்.

பூஜை முடிந்து ஜேசிபி எந்திரத்தின் மூலம் பணியை தொடங்கி வைத்துவிட்டு, எம்எல்ஏ தேன்மொழி சேகர் புறப்படத் தயாரானார். அப்போது அங்கு செய்தி சேகரிக்கநின்ற செய்தியாளர்களிடம், ''அடுத்து எம்.வாடிப்பட்டி கோபாலசமுத்திரம் கண்மாய்க்கு போறோம். எல்லாரும் வாங்க'' என்று கூறினார்.

அதற்கு செய்தியாளர்கள், ''அது பல கிலோ மீட்டர் தூரம், அதனால உடனே வர முடியாது'' என்று கூறினர்கள். அதற்கு எம்.எல்.ஏ.வோ, ''ஊரடங்கு நேரத்துல சென்னைக்கு போயிட்டாரு, வீட்டை விட்டு வெளியே வரவில்லைனு செய்தி போட்டீங்கதானே, நான் கிட்டத்தட்ட பத்து நாளா ஒவ்வொரு ஊரா சுத்திகிட்டு நிவாரண பொருட்கள் கொடுத்துக்கிட்டு இருக்கேன். அதை யாராவது வந்து என்னை படம் எடுத்தீர்களா? செய்தி போட்டிங்களா? இனிமே நான் எங்க போனாலும் வந்து என்னை போட்டோ எடுத்து செய்தி போடணும்'' என்று கிண்டலாக பேசியதை கண்டு அனைத்து செய்தியாளர்களும் 'சரிங்க அக்கா' என்றனர். உடனே அவர்''என்ன அடுத்த ஊருக்கு வருகிறீர்களா? இல்லையா?'' என மீண்டும் எம்எல்ஏ கேட்க, அக்கா நீங்க போங்க, நாங்களும் வர்றோம் என்று சொல்லிவிட்டு அனைத்து செய்தியாளர்களும் எஸ்கேப் ஆகிவிட்டனர்.

admk Dindigul district MLA
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe