நாடாளுமன்ற தேர்தலில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தினகரனின் அமமுக கட்சி படுதோல்வி அடைந்தது. போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் டெபாசிட்டை இழந்தது. இதனையடுத்து அமமுக கட்சியில் இருந்து நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அக்கட்சியிலிருந்து விலகி திமுக மற்றும் அதிமுக கட்சியில் இணைந்து வருகிறார்கள். தினகரன் கட்சியில் கொள்கை பரப்பு செயலாளராக இருந்த தங்க தமிழ்செல்வன் சமீப காலமாக அதிமுகவில் இணைவார் என்று சொல்லப்பட்டு வந்த நிலையில் நேற்றைய தினம் ஒரு ஆடியோ வெளி வந்து அரசியல் வட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837429466-0'); });
இந்த நிலையில் தினகரன், தங்க தமிழ்செல்வன் மோதலுக்கான காரணம் பற்றி விசாரித்த போது, நேற்று முன்தினம் தேனியில் அமமுகவினர் சார்பில் ஒரு கூட்டம் போட்டதாகவும் கூறப்படுகிறது. மதுரை எம்.பி தேர்தலில் அ.ம.மு.க வேட்பாளராக நின்று தோல்வி அடைந்த டேவிட் அண்ணாதுரை, திருப்பரங்குன்றம் அ.ம.மு.க வேட்பாளராக போட்டியிட்ட மகேந்திரன் ஆகிய இருவரது தலைமையில் இந்த கூட்டம் நடந்துள்ளது. இந்த கூட்டத்தில் தங்க தமிழ்ச்செல்வனுக்குப் பதிலாக புதிய நபரை நியமிப்பது தொடர்பாக பேசப்பட்டதாக சொல்லப்பட்டது. இந்த விஷயம் தங்க தமிழ்செல்வனுக்கு தெரிய வர மோதல் இன்னும் முற்றியது. இதனால் அமமுகவில் இருந்து எப்ப வேண்டுமானாலும் தங்க தமிழ்ச்செல்வன் விலகுவார் என்று கூறப்படுகிறது.