நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தினகரனின் அமமுக போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தோல்வியை சந்தித்தது. இந்த தோல்வி அக்கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.இதனால் அக்கட்சியிலிருந்து பல்வேறு மாவட்ட நிர்வாகிகள் திமுக மற்றும அதிமுக கட்சியில் இணைந்து வருகிறார்கள். இந்த நிலையில் தினகரனின் நம்பிக்கையாக இருந்த தங்க தமிழ்ச்செல்வன் அமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தது அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் கள்ளக்குறிச்சி சட்ட மன்ற உறுப்பினரும், தினகரன் ஆதரவாளருமான பிரபு , நான் அரசுக்கு எதிராக செயல்பட மாட்டேன் என கூறியிருப்பது அ.ம.மு.க-வுக்கு மீண்டும் ஒரு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவேன் என்று கூறிவந்த தினகரனுக்கு அவரது ஆதரவு சட்டமன்ற உறுப்பினர் இப்படி கூறியிருப்பது தினகரனுக்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தினகரன் கட்சி நிர்வாகிகள் அமமுகவில் இருந்து விலகி மாற்று கட்சிக்கு செல்வதால் பெரும் பின்னடைவை தினகரன் சந்தித்து வருகிறார்.