ADVERTISEMENT

திமுகவிற்கு அமமுக ஆதரவு!தினகரன் அதிரடி! 

04:01 PM Jun 25, 2019 | Anonymous (not verified)

தமிழக அரசியலில் பல்வேறு நிகழ்வுகளுக்கு இடையே தமிழக சட்டபேரவை கூட்டத்தொடர் வரும் 28ம் தேதி தொடங்க உள்ளது. இந்த கூட்டத்தொடரில் துறை ரீதியான கோரிக்கைகள் விவாதங்கள் நடைபெற உள்ளது. ஒவ்வொரு துறையில் உள்ள கோரிக்கைகள் பற்றிய ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் விவாதிப்பார்கள். இதில் உறுப்பினர்களின் கேள்விக்கு துறைசார்ந்த அமைச்சர்கள் பதிலளிப்பார்கள். மொத்தம் 23 நாட்கள் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறும் அனைத்து நாட்களும் கேள்வி, பதில் உண்டு எனவும் சபாநாயகர் கூறினார்.

ADVERTISEMENT


ADVERTISEMENT


திமுக கொண்டுவரவுள்ள சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் ஜூலை 1-ம் தேதி எடுத்துக்கொள்ளப்படும் என சபாநாயகர் தனபால் நேற்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தங்க தமிழ்ச்செல்வன், தினகரன் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக இன்று செய்தியாளர்களை சந்தித்த தினகரனிடம், அப்போது நிருபர் ஒருவர் சபநாயகருக்கு எதிராக திமுக கொண்டுவரவுள்ள தீர்மானத்தில் உங்கள் நிலைப்பாடு என்ன என கேட்க அதற்கு பதிலளித்த தினகரன், எங்கள் கட்சி 18 சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்த சபாநாயகர் தனபாலுக்கு எதிராக தான் வாக்குகளிப்பேன் என கூறியுள்ளார். இதனால் திமுக சபாநாயகருக்கு எதிராக கொண்டுவரவுள்ள தீர்மானத்தை டி.டி.வி தினகரன் ஆதரிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT