சிறையில் இருக்கும் சசிகலாவும் இப்ப பா.ஜ.க.வுடன் நட்பாக இருக்கலாம் என்று யோசிப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். சிறையிலிருந்து சீக்கிரமா விடுதலையாகணும்னா அதுக்கு பா.ஜ.க.வின் ஒத்துழைப்பு அவசியம்ன்னு சசிகலாவுக்குப் புரியுது. அதனால் பா.ஜ.க.வுடன் நட்பை வளர்த்துக்கொள்ள அவர் நினைக்கிறாராம். ஆனால் தினகரனோ சசியின் நிலைமையைப் பற்றி யோசிக்காமல், தொடர்ந்து பா.ஜ.க.வை எதிர்ப்பதிலேயே குறியாக இருக்கிறாராம். அதனால் சசிகலாவுக்கும் தினகரனுக்கும் இடையில் இணக்கமான உறவு இல்லை என்கிறார்கள்.
அதே சமயம், இளவரசியின் மகனான விவேக், தன் கட்டுப்பாட்டில் இருக்கும் ஜெயா டி.வி.யில் சசிகலாவின் குறிப்பறிந்து, பா.ஜ.க.வுக்கு எதிரான செய்திகள் வராமல் பார்த்துக்கறாராம். அதேபோல், அந்த டி.வி.யில், தினகரன் பற்றிய செய்திகளுக்கும் பிரேக் போட்டு விட்டாராம். இதனால் எரிச்சலான தினகரன், தமிழ் நாட்டின் முக்கிய நதியின் பெயரில் உள்ள தொலைக்காட்சி சேனலை சைலண்ட்டா வாங்கிட்டாராம். அந்த சேனலின் பழைய ஊழியர்கள் வீட்டுக்கு அனுப் பப்பட்டு, புதிய வேகத்துக்கு அந்த சேனலைத் தயார்படுத்துறாராம் தினகரன். இதனால் 2021 சட்டமன்ற தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் களத்தில் இறங்க தீவிரமாக காத்து கொண்டிருப்பதாக சொல்கின்றனர்.