தேர்தல் முடிவுக்கு பிறகு சசிகலாவை இன்று கர்நாடக பார்ப்பன அக்ராஹார சிறைச்சாலையில் தினகரன் சந்தித்தார். தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 38 இடங்களை கைப்பற்றியது.அதிமுக தேனி நாடாளுமன்ற தொகுதியில் மட்டும் வென்றது.தினகரனின் அமமுக போட்டியிட்ட அனைத்து இடங்களிலிலும் தோல்வியை தழுவியது.இது தினகரானுக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது.அதோடு மட்டுமில்லாமல் போட்டியிட்ட அனைத்து இடத்திலும் டெபாசிட்டை இழந்தது.
இது இன்னும் தினகரன் கட்சிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இந்த தேர்தலில் தினகரன் தனது பலத்தை நிரூபித்து அதிமுக கட்சிக்கு பெரும் சவாலாக இருப்பார் என்று அனைத்து தரப்பினரும் கூறிவந்த நிலையில் அனைத்து இடங்களிலும் தோல்வியை சந்தித்தது.இந்த நிலையில் சசிகலாவை இன்று சந்தித்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து பேசியதாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து கட்சியில் ஒரு சில முக்கிய முடிவை சில தினங்களில் அறிவிப்பார் என்றும் கூறி வருகின்றனர்.மேலும் அதிமுக கட்சிக்கு சில அதிருப்தியாளர்கள் போகாமல் இருக்கவும்,அவர்களை தக்க வைக்கவும் நடவடிக்கை எடுப்பார் என்று சொல்லப்படுகிறது.தினகரனின் இந்த தேர்தல் முடிவு சசிகலாவுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.