Advertisment

பாஜகவில் இருந்து திலீப் கண்ணன் விலகல்

 Dilip Kannan quits BJP

தமிழக பாஜக ஐ.டி பிரிவு தலைவர் நிர்மல்குமார் பாஜகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்துள்ள நிலையில்,தற்போது ஐ.டி விங் செயலாளர் திலீப் கண்ணனும்பாஜகவில் இருந்து விலகியுள்ளார்.

Advertisment

இது குறித்து பேஸ்புக் பக்கத்தில் திலீப் கண்ணன் எழுதியுள்ளதாவது, ''கனத்த இதயத்துடன் எழுதுகிறேன்.. இந்த வார் ரூம் சுவர் இன்னும் எத்தனை பேரை காவு வாங்க போகுதோ..?? தான் பதவிக்கு வரும் போது 500 தலைவர்களை உருவாக்குவேன் என்று சொல்லி பதவி ஏற்றார் அண்ணாமலை. பதவியேற்ற 20 மாதத்தில் எத்தனை தலைவர்களை உருவாக்கினார்..?? இறைவனுக்கே வெளிச்சம். ஒருத்தருக்கு கூட மீடியா வெளிச்சம் வந்திடக் கூடாதுனு தொலைக்காட்சி விவாதங்களுக்கு செல்லவிடாமல் இவர் மட்டும் பேட்டி கொடுத்து இன்று வரை சீன் போட்டுட்டு இருக்கார்.

Advertisment

தன்னை சுத்தமானவர், நேர்மையானவர்னு சொல்கிற நபர் ஏன் ஆருத்ரா நிதி நிறுவன மோசடிக் கும்பலை கட்சியில் வைத்துள்ளார். தன்னைவிட டெல்லி அளவில் பெரிய செல்வாக்கு உள்ள தமிழக பாஜக முகமாக இருந்தார் கே.டி.ராகவன். அவரை முதலில் காலி செய்தார் (அவர் மீது இதுவரை எந்தப் பெண்ணும் புகார் அளிக்கவில்லை). அடுத்து பேராசிரியர் சீனிவாசன். மொத்தம் நான்கு பொதுச்செயலாளர்கள். அவர்களில் மூவருக்கு பெருங்கோட்ட பொறுப்பாளர் கொடுத்துவிட்டு தன்னைவிட அறிவாளியான பேராசிரியர் சீனிவாசனுக்கு மட்டும் பெருங்கோட்ட பொறுப்பாளர் கொடுக்கவில்லை. அடுத்து பொன்.பாலகணபதி, மாநில பொதுச்செயலாளர். அவருக்கு சின்ன பிரச்சனை வருது. அக்கா சசிகலா புஷ்பா நான் மீடியாவில் அவர் மீது தவறு இல்லை என்று பேட்டி கொடுக்கிறேன் என்றபோது அந்த அக்காவைத்தடுத்து பொன்.பாலகணபதி அசிங்கப்படுத்தினார். அடுத்து நயினார் அண்ணன், அவரை இவர்கள் இதுவரை ஒரு மனிதனாகக் கூட மதித்தது இல்லை.

அண்ணாமலை வந்து அப்படி யாரையாவது கட்சியில் இணைத்த நிகழ்வு உண்டா?? சொந்த கட்சியில் இத்தனை வருடம் உழைத்தவனை வேவு பார்ப்பது, ஊர் உலகமே கேவலமாகப் பேசும் ரொட்டியை கூடவே வச்சு சுற்றுவதுதான் இந்த புனிதரின் வேலைபோல. நான் சொன்னது உண்மையா பொய்யா என்பது கட்சியின் உள்ளே இருக்கும் 90% நிர்வாகிகளுக்கு தெரியும்.வெளியில் உள்ள சோசியல் மீடியா நண்பர்களுக்கு அவர் புனிதராகத்தான் தெரிவார்.

இன்னும் இந்த வார் ரூம் கோஷ்டிகள் என்னைப்போல எத்தனை பேரை வெளியே அனுப்பப் போகிறது என்று பொறுத்திருந்து பாருங்கள். இந்த சங்கிகளுக்கு ஒன்னு சொல்லிக்க விரும்புகிறேன். எப்படியும் என்ன திட்டுவிங்க. அதுக்கு முன்னாடி ஒரு தீவிர வெறிபிடிச்ச சங்கியே இப்படி போறானே, இவனுங்க எந்தளவுக்கு கேவலமா இருக்கானுங்கனு கொஞ்சமாது யோசிச்சிபாருங்க'' என நீண்ட பதிவை இட்டுள்ளார்.

politics Annamalai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe