Advertisment

ஆயுதங்களை எடுத்துவர ராமர் சொன்னாரா? - மம்தா பானர்ஜி தாக்கு

யாத்திரைகளில் ஆயுதங்களை எடுத்துவரச் சொல்லி ராமர் சொன்னாரா என மேற்குவங்கம் மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கேள்வியெழுப்பியுள்ளார்.

Advertisment

மேற்கு வங்கம் மாநிலத்தில் நேற்று ராம் நவமி விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவிற்காக ஒவ்வொரு தரப்பினரும் விதவிதமான யாத்திரைகளை மேற்கொண்டனர். அதில் புருலியா மாவட்டத்தில் உள்ள பேல்டி கிராமத்தில் நடைபெற்ற பேரணியின் போது ஏற்பட்ட மோதல் பின்னர் கலவரமாக மாறியது. இதில் நான்கு பேர் படுகாயமடைந்தனர். ஒருவர் கொல்லப்பட்டார்.

இந்த யாத்திரையின் போது இந்துத்வ அமைப்புகள் பல ஆயுதங்கள் ஏந்தியபடி பேரணி நடத்தினர். குறிப்பாக ராம் மந்திர் மகோத்சவ் சமிதி என்ற அமைப்பு இந்து ஒருங்கிணைப்பு உள்ளிட்ட கோஷங்களை எழுப்பியதாக தகவல்கள் வெளியாகின.

Advertisment

இதுகுறித்து இன்று செய்தியாளர்களைச் சந்தித்த மேற்குவங்கம் மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, ‘பேரணிகளில் ஆயுதங்களை எடுத்து வரச்சொல்லி ராமர் என்றைக்காவது சொன்னாரா? சில குண்டர்கள் ராமரின் பெயரில் இதுமாதிரியான நிகழ்வுகளை தவறாக பயன்படுத்தி விடுகிறார்கள். நான் அமைதியான பேரணிக்குத்தான் அனுமதி தந்தேன். வீட்டிலுள்ள துப்பாக்கி, வாளை எடுத்து வந்து, அப்பாவிகளை ராமரின் பெயரால் கொல்ல அனுமதி தரவில்லை’ என கோபமாக பேசியுள்ளார்.

CPM BJP West bengal Trinamool mamata banarjee
இதையும் படியுங்கள்
Subscribe