Advertisment

“சசிகலாவைச் சுற்றியுள்ளவர்கள் நல்ல செய்திகளைச் சொல்லிக் கொடுக்க வேண்டும்..” - திவாகரன்

Dhivakaran spoke about sasikala and admk

"சசிகலாவின் நோக்கம் அதிமுகவை கைப்பற்றுவது தான். இதற்கு காலம் பதில் சொல்லும். சசிகலா தலைமையில் தலைமையேற்க ஒரு சிலரை தவிர அதிமுகவில் பெரும்பாலானோர் தயாராக உள்ளனர்" என்று திவாகரன் தெரிவித்திருக்கிறார்.

Advertisment

அண்ணா திராவிடர் கழகத்தின் 5ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் திவாகரன் பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் உருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

Advertisment

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டியளித்த அவர், "வி.கே.சசிகலா சிறையிலிருந்து வந்து ஒரு வருடமாகியுள்ளது. கட்சியில் எதிர்பார்ப்புகளையும், சில நகர்வுகளையும் செய்து வருகிறார். சசிகலா அதிமுக பொதுச்செயலாளராக இருக்கிறாரோ இல்லையோ, அவர் தான் பொதுச்செயலாளர் என பொதுக்குழு உறுப்பினர்களின் தீர்மானத்தை இன்னும் பெரும்பாலானஅதிமுகவினர் ஏற்றுக் கொண்டுள்ளார்கள்.

ஆறுமுகசாமி விசாரணை முடிவுற்றது. அறிக்கை வெளிவரவில்லை. இதை நாங்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கிறோம். சசிகலாவின் அடுத்த கட்ட நடவடிக்கையை எதிர்பார்த்துள்ளோம். சிதறி கிடக்கும் அதிமுகவை சீரமைக்க முடிந்தால் அதற்கு நாங்கள் ஒத்துழைப்பு கொடுக்கவும் தயாராக இருக்கிறோம். சசிகலா ஒரு பெண், அவரை சுற்றியுள்ளவர்கள் நல்ல செய்திகளை சொல்லி கொடுக்க வேண்டும். சசிகலா தலைமையில் தலைமையேற்க ஒரு சிலரை தவிர அதிமுகவின் பெரும்பாலானோர் தயாராக உள்ளனர். வி.கே.சசிகலாவின் நோக்கம் அதிமுகவை கைப்பற்றுவது. இதற்கு காலம் பதில் சொல்லும். அதிமுகவில் சம்பாதித்தவர்கள் ஒரு போதும் அதிமுகவிற்கு துரோகம் செய்ய கூடாது. அதிமுகவிற்கு தற்போது சோதனையான நேரம். இந்த இயக்கத்தை காப்பாற்ற வேண்டுமே தவிர இயக்கத்தை அழிக்க கூடாது. அதிமுகவை மீண்டும் ஆட்சியில் அமர வைப்பதற்கு உண்மையான அதிமுகவினர் ஒன்று சேரவேண்டும்" எனத்தெரிவித்தார்.

admk sasikala Dhivakaran
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe