Advertisment

ஜெயலலிதாவின் தன்மானத்தையே அடகு வைத்து விட்டார்கள் : திவாகரன் 

தாங்கள் செய்த குற்றங்களை மறைக்க ஜெயலலிதாவின் தன்மானத்தையே அடகு வைத்து விட்டார்கள் என்று திவாகரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Advertisment

அண்ணா திராவிடர் கழக பொதுச் செயலாளர் திவாகரன் மன்னார்குடியில் வெளியிட்டுள்ள அறிக்கை:

Advertisment

ஜெயலலிதா உயிரோடு இல்லாத சூழலில் நடைபெற உள்ள முதல் மக்களவை தேர்தலில் யார் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கப் போகிறார்கள் என்பதை உலகமே உற்று பார்த்துக் கொண்டிருக்கிறது.

Dhivakaran

எம்ஜிஆர் அதிமுகவை உருவாக்கி அண்ணாவின் கொள்கை வழியில் நம்மை எல்லாம் செயல் பட வைத்தார். ஜெயலலிதா எம்ஜிஆர் அண்ணா கொள்கைகளுக்கு உயிர் கொடுத்து காப்பாற்றினார்.

ஜெயலலிதாவின் தன்மானம் மிகுந்த அரசியல் ஆளுமையை மரியாதைக்குரிய மானம் கெட்டவர்கள் தேர்தல் சந்தையிலே ஏலம் போடுகிறார்கள். தாங்கள் செய்த குற்றங்களை மறைக்க ஜெயலலிதாவின் தன்மானத்தையே அடகு வைத்து விட்டார்கள்.

தமிழக மக்கள் ஒரு போதும் ஊழல் சக்திக்கு ஒரு விரல் ஆதரவை தர மாட்டார்கள். எனவே நடைபெற உள்ள தேர்தலில் நல்லவர்கள், தொண்டுள்ளம் கொண் டவர்களுக்கு கையூட்டு பெறாமல் வாக்களிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை மக்களிடையே பிரசாரம் செய்து இந்த மக்களவை தேர்தலில் எங்களின் ஜனநாயக கடமையை ஆற்ற உள்ளோம். இவ்வாறு கூறியுள்ளார்.

brother Dhivakaran elections sasikala
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe