Skip to main content

துணை முதல்வர் பதவி இருந்தும் பவர் இல்லை ஆதங்கத்தில் ஓ.பி.எஸ்!

Published on 07/05/2019 | Edited on 07/05/2019

வழக்கம் போல் தனக்கு வெயிட்டான அதிகாரம் வேணும்ன்னு கேட்டாரா? அரசியல்வாதியோட கோரிக்கை வேற என்னவா இருக்கும்? என்ற பல கேள்விகள் சமீப காலமாக ஓ.பி.எஸ்.எஸ்ஸை சுற்றி வந்து கொண்டிருக்கிறது. நிதித்துறையும்  நகர்ப்புறம், மற்றும் வீட்டு வசதித்துறையும் தன்னிடம் இருந்தபோதும், துணை முதல்வர் என்பதற்கான எந்தவித சிறப்பு பவரும் அதிகாரமும் இல்லைங்கிற தன் ஆதங்கத்தை அவர்களிடம் வெளிப்படுத்தினாராம் ஓ.பி.எஸ். அதேபோல் மீண்டும் பா.ஜ.க.  ஆட்சி மத்தியில் அமைந்தால் தன் மகனுக்கு பா.ஜ.க. அமைக்கும் கேபினட்டில் பவர் ஃபுல்லான ஒரு மந்திரி பதவி தேவைன்னும் , ஒருவேளை தேனியில் முடிவு எதிர்பார்த்த மாதிரி வராமல் போனால், தன் மகனுக்கு ராஜ்யசபா பதவி கொடுத்து மந்திரியாக்கணும்னும் கேட்டுக்கொண்டாராம். 

 

opsஇடைத்தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, எடப்பாடி ஆட்சிக்கு சிக்கல் வந்தால், தன்னால துணை முதல்வரா நீடிக்க முடியாதபட்சத்தில், தன்னை ஏதாவது ஒரு மாநிலத்துக்கு கவர்னராக ஆக்கணும்னு அழுத்தமா சொல்லியிருக்காரு. ஓ.பி.எஸ். மேலே பா.ஜ.க. லீடர்களுக்கு எப்போதுமே நம்பிக்கை உண்டு. அதனால அவர் போட்ட டீலை பா.ஜ.க. தலைவர்கள் மறுக்கவில்லை என்று நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் அந்த சந்திப்பின் போது  பா.ஜ.க.  சீனியர் ஒருவர், அவர் நம்ம பா.ஜ.க.விலேயே சேர்ந்துடலாம்ன்னு கலகலப்பா சொல்ல, இதிலிருந்துதான் ஓ.பி.எஸ். பா.ஜ.க.வில் சேரப் போறார்ங்கிற வதந்தி அணுகுண்டா வெடிச்சி  நாலா பக்கமும் பரவ  ஆரம்பிச்சிது.  இது பற்றி நிருபர்கள் ஓ.பி.எஸ்.சிடமே நேரடியாகக் கேட்க, அதுக்குப் பிறகுதான் அவர் அழுத்தமா மறுப்பு சொல்ல வேண்டிய நிலை உருவானது.இப்படி பரபரப்பாக அரசியல் சென்று கொண்டிருப்பதால் மே 23க்கு பிறகு தமிழக்தில் நிறைய மாற்றங்கள் வரும் என்று மக்களும்,அரசியல் விமர்சகர்களும் கருதுகின்றனர்.
 

சார்ந்த செய்திகள்

 

Next Story

சூறைக்காற்று வீசியதில் துண்டிக்கப்பட்ட மின் கம்பம்; மின்சாரம் இன்றி தவிக்கும் மக்கள்

Published on 23/07/2024 | Edited on 23/07/2024
people are suffering without electricity

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை அருகே அரண்மனை புதூர் கிராமம் உள்ளது. இந்தக் கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். 

இந்த நிலையில் கடந்த வாரம் சூறைக்காற்றுடன் சாரல் மழை பெய்து வந்த நிலையில் அரண்மனை புதூர் கிராமத்தில் மின்சாரம் வழங்கி வரும் மின்கம்பங்கள் பாதியிலேயே முறிந்து விழுந்து விட்டதால் ஒரு வாரத்திற்கு மேலாக மின்சாரம் இன்றி பொதுமக்கள் தவித்து வருகின்றனர். எனவே மின் கம்பத்தை சரி செய்து உடனடியாக மின்சாரம் வழங்க அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

Next Story

துணை முதல்வர் பதவி? - உதயநிதி ஸ்டாலின் விளக்கம் 

Published on 20/07/2024 | Edited on 20/07/2024
Udayanidhi Stalin answered about Deputy Chief Minister position

திமுக இளைஞரணியின் 45ஆம் ஆண்டு தொடக்க விழா சென்னையில் இன்று நடைபெற்றது. இதில், விளையாட்டுத் துறை அமைச்சரும், திமுகவின் இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். 

அப்போது அவர், “துணை முதல்வர் பதவி உயர்வு குறித்துப் பல செய்திகள் வருகின்றன. எங்கள் அரசில் உள்ள அனைத்து அமைச்சர்களும் முதல்வருக்கு துணையாக இருப்பார்கள் என்று நான் முன்பே பத்திரிகையாளர்களிடம் கூறியிருக்கிறேன். திமுக ஆட்சியில் உள்ள அனைத்து அமைச்சர்களும் முதல்வரின் துணையாகத் தான் பணியாற்றி வருகின்றனர்.

எந்தப் பதவியாக இருந்தாலும், என்னைப் பொருத்தவரை இளைஞர் அணிச் செயலாளர் பதவிதான் எனக்குப் பிடித்தது. கடந்த தேர்தல்களைப் போல் 2026 தேர்தல்தான் நமது இலக்கு. எந்தக் கூட்டணி வந்தாலும் நமது தலைவர் தான் வெற்றி பெறுவார். மீண்டும் தமிழக முதல்வராகப் பொறுப்பேற்பார் நமது முதல்வர் மு.க.ஸ்டாலின். 2026 சட்டமன்றத் தேர்தலில் நமது திமுக கூட்டணிதான் வெற்றிபெறப் போகிறது.  தினமும் காலையிலும் மாலையிலும் குறைந்தது பத்து நிமிடங்களாவது சமூக வலைத்தளங்களில் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும்.