Advertisment

துணை முதல்வர் பதவி! ஓ.பி.எஸ். - தங்கமணி மோதல்! அதிமுகவில் புதிய குழப்பம்

அதிமுகவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அனைத்து விதமான டெல்லி தொடர்புகளுக்கும் உதவியாக இருப்பவர் தங்கமணி. ஓ.பன்னீர்செல்வத்தை மீறி அதானி குடும்பத்துடன் மிக நெருக்கமாக இருக்கும் திரிவேணி என்கிற கம்பெனி மூலம் எடப்பாடி பழனிசாமிக்கு இருக்கும் டெல்லி தொடர்புகளை பெற்றுக்கொடுத்தவர் தங்கமணி.

Advertisment

ops-thangamani-eps

இப்பொழுது ஓ.பன்னீர்செல்வம் டெல்லியில் மீண்டும் வலுப்பெற்று விட்டார். முத்தலாக் மசோதாவை ஆதரித்து ரவீந்திரநாத் குமார் மக்களவையில் பேசியதைத்தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் கை மிகவும் ஓங்கிவிட்டது.

Advertisment

ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியின் பொதுச்செயலாளராக ஆக்க வேண்டும் என்கிற கோரிக்கை பாஜகவில் வலுப்பெற்று வருகிறது. இதை மட்டுப்படுத்த தங்கமணியின் தயவை எடப்பாடி பழனிசாமி நாடியுள்ளார். அதற்கு தங்கமணி ஒரு டிமாண்ட் வைத்துள்ளார். ஓ.பன்னீர்செல்வத்தை துணை முதலமைச்சராக்கியது போல் தன்னையும் துணை முதலமைச்சராக்குங்கள் என எடப்பாடி பழனிசாமியிடம் தங்கமணி கோரிக்கை வைத்துள்ளார்.

ஒரு மாநிலத்தில் இரண்டு துணை முதலமைச்சர்கள் இருக்கலாம். அதற்கு ஏற்கனவே பல முன்னுதாரணங்கள் இருக்கிறது என தங்கமணி கூறியிருக்கிறார். முக்குலத்தோர் இனத்தைச் சேர்ந்த ஓ.பன்னீர்செல்வர் துணை முதலமைச்சர், மீண்டும் எடப்பாடி பழனிசாமியின் கவுண்டர் இனத்தைச் சேர்ந்தவரான தங்கமணி துணை முதலமைச்சர் ஆவதா என அதிமுகவில் இருக்கும் வன்னியர்களான கே.பி.முனுசாமியும், சி.வி.சண்முகமும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.

தங்கமணி துணை முதலமைச்சர் பதவி கேட்பது குறித்த செய்திகள் அங்கொன்றும், இங்கொன்றுமாக வெளிப்பட்டு வருவது அதிமுகவில் பெரிய குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. தங்கமணி துணை முதலமைச்சர் பதவி கேட்கிறார் என்ற செய்தியை ஓ.பன்னீர்செல்வம்தான் லீக் செய்கிறார் என தங்கமணி தரப்பு ஓ.பன்னீர்செல்வம் மீது கடும் கோபத்தில் இருக்கிறது.

edapadi palanisamy thangamani O Panneerselvam post Deputy Chief Minister aiadmk
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe