தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார் என்றும் சில நாட்கள் ஓய்வில் இருக்க மருத்துவர் அறிவுறுத்தியுள்ளார் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, ‘தமிழக துணை முதலமைச்சரும், திமுக இளைஞர் அணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் கடும் காய்ச்சல் மற்றும் தொடர் இருமலால் அவதிப்படுவதால், அடுத்த சில நாடுகளுக்கு அவர் ஓய்வில் இருக்க வேண்டும் என்று மருத்துவர் அறிவுறுத்தியுள்ளார். அதனால் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்ள இருந்த அரசு நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒத்திவைக்கப்படுகின்றன’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.