Advertisment

பாஜகவை கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம்... காங்கிரஸ் அறிவிப்பு

tamilnadu-congress-committee

பாஜகவை கண்டித்து சென்னை கிண்டில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

Advertisment

இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் செய்திக்குறிப்பில், ராஜஸ்தான் மாநிலத்தில் பெரும்பான்மை சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவோடு நடைபெற்று வரும் முதலமைச்சர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்கும் முயற்சியின் மூலம் ஜனநாயகப் படுகொலையை நிகழ்த்தி வரும் பா.ஜ.க. வை கண்டித்து சென்னை, கிண்டியில் அமைந்துள்ள ஆளுநர் மாளிகை முன்பாக நாளை (27.07.2020) காலை 10.30 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

Advertisment

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக நடைபெறும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு செயல் தலைவர்கள் டாக்டர் கே. ஜெயக்குமார் எம்.பி, எச். வசந்தகுமார் எம்.பி, டாக்டர் எம்.கே. விஷ்ணு பிரசாத் எம்.பி மற்றும் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் எம்.எஸ். திரவியம், சிவ. ராஜசேகரன், கே. வீரபாண்டியன் ஆகியோர் முன்னிலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். சென்னை, சின்னமலையில் அமைந்துள்ள அமரர் ராஜீவ் காந்தி சிலையில் இருந்து கண்டன ஆர்ப்பாட்டப் பேரணி கண்டன முழக்கங்களுடன் புறப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Announcement TNCC
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe