A demonstration by EPS and a consultative meeting by OPS

சொத்துவரி உயர்வு, மின்கட்டண உயர்வு, பால்விலை உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு எனப் பல்வேறு பிரச்சனைகளைக் கண்டித்து அதிமுக ஈபிஎஸ் தரப்பின் சார்பாக சென்னையில் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள்நடைபெற்று வருகின்றன.

Advertisment

திமுக அரசினை கண்டித்து அனைத்து மாவட்டங்களிலும் இருக்கக்கூடிய நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில் டிச. 13 ஆம் தேதி அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என ஈபிஎஸ் தரப்பு அறிவித்திருந்தது. ஆனால், கடந்த வாரங்களில் பெய்த கனமழையின் காரணமாக சில மாவட்டங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடத்த முடியாமல் அது தள்ளிவைக்கப்பட்டது.

Advertisment

ஆர்ப்பாட்டங்கள் தள்ளிவைக்கப்பட்ட மாவட்டங்களில் இன்று அதிமுக ஈபிஎஸ் தரப்பினர் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர். சென்னையில் மட்டும் 30 இடங்களில் இந்த ஆர்ப்பாட்டம் நடந்து வருகின்றன.

அதே சமயத்தில் அதிமுக ஓபிஎஸ் தரப்பு சார்பில் சென்னையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறுவதும் குறிப்பிடத்தக்கது.