Advertisment

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எதிராக திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். பட்டமளிப்புவிழாவைக்கால தாமதப்படுத்துவது, அரசியலமைப்பு சட்ட விதிகளுக்குமாறாகத்துணைவேந்தரை நியமனம் செய்வதுஉள்ளிட்டவற்றைக்கண்டித்து ஆளுநர் ஆர்.என். ரவிக்குஎதிராக மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு(FSO) சார்பில் சைதாப்பேட்டைசின்னமலைஅருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். திமுக,திக, விசிக, சி.பி.எம் உள்ளிட்ட கட்சிகளில் உள்ளமாணவர்கள் அமைப்பு பங்கேற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவியைதிரும்பப் பெறவும் வலியுறுத்தப்பட்டது.