/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/706_3.jpg)
இலங்கையில் வாழும் முஸ்லிம்கள், கரோனா நோயினால் பாதித்து இறந்தால் அவர்களின் உடலை இஸ்லாமிய மார்க்கத்தின் படி நல்லடக்கம் செய்யப்பட வேண்டும். இதனை வலியுறுத்தும் வகையில், உலக சுகாதார நிறுவனம் பல்வேறு வழிகாட்டல்களை தெரிவித்திருக்கிறது.
ஆனால், அந்த வலிகாட்டல்களை மீறும் வகையில், முஸ்லிம்களின் உடல்களை தீயிட்டு எரித்து தகனம் செய்து வருகிறது இனவாத இலங்கை அரசு. இந்த விவகாரம் உலகம் முழுவதும் சர்ச்சையாகி வரும் நிலையில், இலங்கை இனவாத அரசின் அத்தகைய போக்கினை கண்டித்து, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் இன்று ( 6.11.2020) மாலை 4 மணிக்கு சென்னையில் உள்ள இலங்கைத் தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
தமுமுக தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா தலைமையில் நடைபெற உள்ள இந்த ஆர்ப்பாட்டத்தில் முஸ்லீம்கள் அதிக அளவில் திரளுவார்கள் என்பதால் இலங்கை தூதரகத்துக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)