Skip to main content

காங்கிரஸ், ம.ஜ.த. கூட்டணிதான் ஜனநாயகத்தைக் கொன்றது! - அமித்ஷா குற்றச்சாட்டு

Published on 17/05/2018 | Edited on 17/05/2018

கர்நாடக சட்டசபைத் தேர்தலுக்குப் பிந்தைய செயல்பாடுகளின் மூலம் பா.ஜ.க. ஜனநாயகத்தைப் படுதோல்வி அடையச் செய்துவிட்டதாக ராகுல்காந்தி குற்றம்சாட்டி இருந்தார். ஆனால், காங்கிரஸ் கட்சி மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி வைத்ததால்தான் ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டதாக பாஜக தேசிய தலைவர் அமித்ஷா கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். 

Amit

 

 

 

காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி, கர்நாடக மாநில முதல்வராக எடியூரப்பா முதல்வராக தேர்வுசெய்யப்பட்டதை அடுத்து, இன்று காலை கிடைக்கவே இல்லாத ஒரு வெற்றிக்காக பா.ஜ.க.வினர் கொண்டாடிக் கொண்டிருக்கும் வேலையில் ஜனநாயகத்தின் படுதோல்வியை எண்ணி இந்தியாவே அழுதுகொண்டிருக்கிறது என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

 

இந்நிலையில், ராகுல்காந்தியின் கருத்துக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பேசியுள்ள பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா, ‘தோல்வியடைந்த காங்கிரஸ் கட்சி கர்நாடக மக்களின் நலன்களைக் கருத்தில் கொள்ளாமல், அரசியல் ஆதாயத்தைக் கணக்கில் கொண்டு சந்தர்ப்பவாதமாக ம.த.ஜ.வுடன் கூட்டணி வைத்த நொடியிலேயே ஜனநாயகம் படுமோசமாக கொல்லப்பட்டது. இது அவமானகரமானது’ என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

 

 

 

 

 

மேலும், ‘காங்கிரஸ் ஆட்சியில் அரசியலமைப்புச் சட்டம் 356ன் மூலம் எமர்ஜென்சி கொண்டுவரப்பட்டது. அப்போது ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டதை வழக்கம்போல் காங்கிரஸ் தலைவர் மறந்திருக்கிறார். கர்நாடக தேர்தலில் பா.ஜ.க. தனிப்பெரும் கட்சியாக 104 தொகுதிகளில் வெற்றிபெற்றிருக்கிறது. குறைவான தொகுதிகளில் வெற்றிபெறச் செய்து மக்கள் உங்களை தோற்கடித்திருக்கிறார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்’ எனவும் அதில் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்