ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் நீதிமன்ற காவலில் தற்போது திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ப.சிதம்பரம் தாக்கல் செய்த ஜாமீன் மனு, கடந்த 11-ம் தேதியில் இருந்து விசாரணையில் இருக்கிறது. டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி சுரேஷ் குமார் முன்னிலையில் தினமும் விசாரணை நடைபெற்று வந்தது. சிதம்பரத்துக்கு ஜாமீன் தரவே கூடாது என சிபிஐ வழக்கறிஞர் துஷார் மேத்தா வாதிட்டார். அப்போது, " நிதி அமைச்சக்கத்தின் வருகைப் பதிவேடு அழிக்கப்பட்டிருக்கிறது. இந்திராணி முகர்ஜி இவ்வழக்கில் அப்ரூவராகி இருக்கிறார். தாம் ஒரு எம்.பி. என்பதால் வெளிநாட்டுக்கு தப்பி செல்ல மாட்டேன் என சிதம்பரம் கூறுவதை ஏற்க முடியாது. ஏற்கனவே ஒரு எம்.பி. நாட்டை விட்டு தப்பி ஓடிவிட்டார். ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் கொடுத்தால் அவர் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்வார். சிதம்பரம் எந்த வெளிநாட்டுக்குச் சென்றாலும் அங்கே நிரந்தரமாக தங்கும் அளவுக்கு செல்வாக்கு படைத்தவர். சிறையில் இருக்கும் அவர் அரசுக்கு எதிரான கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்.எனவே சாட்சிகளை அவர் கண்டிப்பாக கலைத்துவிடுவார். எனவே அவருக்கு ஜாமீன் வழங்க கூடாது" என்று கோரினார்.

Advertisment

ghvk

குற்றாச்சாட்டுக்களுக்கு எந்த முகாந்திரமும் இல்லாததால் சிதம்பரத்துக்கு ஜாமீன் வழக்க வேண்டும் என்றும், அவருக்கு ஜாமீன் வழங்கினால் அவர் சாட்சியங்களை கலைக்கமாட்டார் என்றும், நீதிமன்ற வழிக்காட்டுதலின் படி அவர் நடப்பார் என்றும் சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, சிதம்பரம் தரப்புக்கு ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்து உத்தரவிட்டார்.