Delhi Deputy Chief Minister Matters; Chief Stalin's letter to the Prime Minister

Advertisment

மணீஷ் சிசோடியாவை நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும் எனமுதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், “டெல்லி துணை முதலமைச்சராக இருந்த மணீஷ் சிசோடியாவை இட்டுக்கட்டிய புகாரில் கைது செய்து, தனிநபர் சுதந்திரத்தை மீறியுள்ளது வேதனையைத்தருகிறது.

அனைத்து விதிகளும் காற்றில் பறக்கவிட்டு வழக்கமான சட்ட நடைமுறைகள் ஒன்றிய ஆட்சியில் இருப்பவர்களின் தனிப்பட்ட மனநிறைவுக்காக மீறப்பட்டு இருக்கின்றன. புலனாய்வு அமைப்புகள் மற்றும் ஆளுநர் போன்ற சட்ட அமைப்புகளை அரசியல் காழ்ப்புணர்ச்சியின் ஆயுதமாக எதிர்க்கட்சித் தலைவர்களின் மீது மட்டுமே ஏவப்படுகிறது. அரசியல் சட்டத்தின் அடிப்படை கொள்கைகளை கொச்சைப்படுத்தி மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டுள்ளார். அவரை நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.