“Decided to form a strong alliance” - PL Chandosh

Advertisment

பா.ஜ.க. மாநில மையக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை, தேசிய அமைப்புச் செயலாளர் பி.எல். சந்தோஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதன்பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த பா.ஜ.க. தேசிய அமைப்புச் செயலாளர் பி.எல். சந்தோஷ், “தமிழகம் முழுவதும் அனைத்து நாடாளுமன்றத் தொகுதிகளிலும் ஒரு தொகுதிக்கு 2 பொறுப்பாளர்கள் நியமிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. இதுவரை பெறாத வாக்கு சதவீதத்தை பெற வேண்டும் எனும் நோக்கத்தில் பணிகள் நடைபெறும். வலுவான கூட்டணி அமைக்க பா.ஜ.க. தேசியத் தலைமை முடிவு செய்துள்ளது” என்று தெரிவித்தார்.