
அதிமுகவின் பொதுக்குழு, செயற்குழுக் கூட்டம் இன்று சென்னை அடுத்த வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற இருக்கின்ற நிலையில் ஆயிரக்கணக்கில் தொண்டர்கள் கூடியுள்ளனர். ஓபிஎஸ்ஸும், இபிஎஸ்ஸும் பொதுக்குழு கூட்டம் நடைபெற இருக்கும் மண்டபத்திற்கு வருகை தந்துள்ளனர்.
முன்னதாக பொதுக்குழுவுக்கு தடைவிதிக்க வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கில் 23 தீர்மானங்களை நிறைவேற்றுவதற்குத்தான் சம்மதம் தெரிவிப்பதாகவும், அதனைத் தவிர புதிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படக் கூடாது என ஓபிஎஸ் தரப்பில் வாதிடப்பட்டது. அதேபோல் எடப்பாடி பழனிசாமி தரப்பில், 'பொதுக்குழுவில் இது நடக்கலாம் இது நடக்கக் கூடாது என்று கூற இயலாது. எந்த செயல்திட்டங்களும், அஜெண்டாக்களும் இல்லாமலே இதற்கு முன் பொதுக்குழுக்கள் நடந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கு மேல் பொதுக்குழுவுக்கு அஜெண்டா கொடுப்பதே இல்லை என எடப்பாடி பழனிசாமி தரப்பு வாதிட்டது. அதனை தொடர்ந்து நள்ளிரவு வரை நீண்ட விசாரணையில் ஒற்றைத் தலைமை தொடர்பான தீர்மானத்தை கொண்டு வரக்கூடாது என நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
இந்நிலையில் இன்னும் சிறிது நேரத்தில் துவங்கும் பொதுக்குழுவில் ஓபிஎஸ் ஒப்புதல் அளித்த 23 தீர்மானங்களை நிறைவேற்ற வாய்ப்பில்லை என்றும், ஒற்றைத் தலைமை குறித்து மட்டும் விவாதிக்க இபிஎஸ் தரப்பு முடிவெடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே ஓபிஎஸ்ஸை வெளியேறச் சொல்லி முழக்கம் எழுந்ததால் அவரின் ஆதரவாளர்கள் வைத்தியலிங்கமும், ஜெசிடி.பிரபாகரும்மேடையிலிருந்து வெளியேறியது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)