Advertisment

பிரதமர் மோடிக்கு தயாநிதிமாறன் அவசரக் கடிதம்! 

dmk

அமெரிக்காவிற்குப் பல்வேறு மேற்படிப்புகளுக்காகச் சென்றுள்ள மாணவர்களின் விசா காலத்தை நீட்டிக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு அவசரக் கடிதம் அனுப்பியுள்ளார் திமுக எம்.பி. தயாநிதி மாறன்.

Advertisment

மேற்படிப்புகளுக்காக ஒவ்வொரு வருடமும் இந்தியாவிலிருந்து நூற்றுக்கணக்கான மாணவர்கள் அமெரிக்காவுக்குச்செல்கின்றனர். இதில் தமிழக மாணவ- மாணவிகளும் அடங்குவர். இவர்களுக்கு எஃப்-1 மற்றும் எம்-1 விசாக்களை வழங்குகிறது அமெரிக்க அரசாங்கம்.

Advertisment

இந்த நிலையில், அந்த விசாக்களின் காலம் முடிந்துள்ள நிலையில் அதனை நீட்டிக்க மறுத்து வருகிறது அமெரிக்கா. இதனால், ஆயிரக்கான மாணவ- மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களின் நலன் கருதி, அவர்களின் விசா காலத்தை நீட்டிக்க அமெரிக்க அரசாங்கத்தை வலியுறுத்தும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு அனுப்பி வைத்துள்ள தனது கோரிக்கை கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார் தயாநிதிமாறன் எம்.பி. !

narandra modi dayanidhi maran
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe