Skip to main content

தயாநிதிமாறன் தோல்வி பயத்தால் அவதூறுகளை பரப்புகிறார்: எஸ்.டி.பி.ஐ. கண்டனம்

Published on 15/04/2019 | Edited on 15/04/2019

 

மத்திய சென்னை தொகுதியில் திமுக வேட்பாளர் தயாநிதிமாறன் தோல்வி பயத்தால் எஸ்.டி.பி.ஐ. கட்சி மீது அவதூறுகளை பரப்பி வருகின்றார் என்று எஸ்.டி.பி.ஐ. கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில பொதுச்செயலாளர் நிஜாம் முகைதீன் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது;

 

Dayanidhi Maranநாடாளுமன்ற தேர்தலில் அமமுகவுடன் கூட்டணி அமைத்துள்ள எஸ்.டி.பி.ஐ. கட்சி, மத்திய சென்னை தொகுதியில் போட்டியிடுகின்றது. எஸ்.டி.பி.ஐ. கட்சியின் வேட்பாளராக கட்சியின் தேசிய துணைத் தலைவர் தெஹ்லான் பாகவி பரிசு பெட்டகம் சின்னத்தில் போட்டியிடுகின்றார். தேர்தல் அறிவிப்பு வெளியான நாள் முதல் மக்கள் பிரச்சினைகள் குறித்தும், தொகுதியின் அடிப்படை பிரச்சினைகளை நிறைவேற்றுவது குறித்தும் தொகுதி மக்களை நேரடியாக சந்தித்து எஸ்.டி.பி.ஐ. கட்சி பிரச்சாரங்களை வீரியமாக செய்துகொண்டிருக்கிறது.
 

அதுமட்டுமின்றி 50க்கும் மேற்பட்ட அமைப்புகளும், சமூக ஆர்வலர்களும் எஸ்.டி.பி.ஐ. கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
 

கடந்தகாலங்களில் எஸ்.டி.பி.ஐ. கட்சி மேற்கொண்ட மக்கள் பணிகள் மூலமும் தமிழக உரிமைகள் சார்ந்த போராட்டங்கள் மூலமும் மதுவுக்கு எதிரான போராட்டங்கள் மூலமும் தொகுதி மக்களுக்கு நன்கு பரிட்சயமான எஸ்.டி.பி.ஐ. கட்சியின் வேட்பாளர் தெஹ்லான் பாகவிக்கு பெருகிவரும் ஆதரவால், எதிர்த்து போட்டியிடும் அனைத்து கட்சிகளும் கலக்கமடைந்துள்ளன.

 

குறிப்பாக இரண்டு முறை மத்திய சென்னை தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டும், மக்களின் அடிப்படை பிரச்சினைகளை தீர்க்காத, பல்வேறு முறைகேடு வழக்குகளில் சிக்கி விசாரணையை எதிர்கொண்டுவரும் திமுக வேட்பாளர் தயாநிதிமாறன் தோல்வி பயத்தால் எஸ்.டி.பி.ஐ. கட்சி மீது அவதூறுகளை பரப்பி வருகின்றார்.


 

sdpiஅமமுக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் வீரியமான தேர்தல் பிரச்சாரத்தை திட்டமிட்டு தடுத்தும், பிரச்சாரத்துக்கு செல்லும் பெண்களை தாக்கியும், தரக்குறைவாக விமர்சித்தும் தனது அரசியல் அராஜக போக்கை திமுக கட்டவிழ்த்துவிட்டு வருகின்றது. இதற்கு எதிராக எஸ்.டி.பி.ஐ. கட்சி சட்டரீதியான போராட்டங்களை மேற்கொள்ளும் வேளையில், எஸ்.டி.பி.ஐ. கட்சி வாக்கிற்கு பணம் கொடுப்பதாகவும், அதனை திமுகவினர் தடுப்பதாகவும் அவதூறுகளை திமுக வேட்பாளர் தயாநிதிமாறன் மேற்கொண்டு வருகின்றார். தனது ஆதரவு ஊடகங்கள் மூலமும் அந்த தவறான பிரச்சாரத்தை செய்து வருகின்றார். இத்தகைய அவதூறு பிரச்சாரத்தை எஸ்.டி.பி.ஐ. கட்சி வன்மையாக கண்டிக்கிறது.  

 

எஸ்.டி.பி.ஐ. கட்சி குறித்து மக்கள் நன்கறிவார்கள். கடந்த காலத்தில் இதே மத்திய சென்னை தொகுதியில் தேர்தல் வெற்றிக்காக தயாநிதிமாறன் மேற்கொண்ட வன்முறை தாக்குதல்களையும் மக்கள் அறிவார்கள். தேர்தலில் எப்படியாவது வெற்றிபெற்று தன் மீதான வழக்கின் விசாரணையை தடுத்து நிறுத்த வேண்டும் என்ற திட்டத்துடனேயே தயாநிதிமாறன் திமுகவினர் உதவியுடன் வன்முறைகளை ஏவிவருகின்றார். திமுக வேட்பாளர் தயாநிதி மாறனுக்கு தேர்தலின் மூலம் மக்கள் தக்க பதிலடி தருவார்கள் என்பதை தெரிவித்துக்கொள்கின்றேன். இவ்வாறு தெரிவித்துள்ளார்.


 

சார்ந்த செய்திகள்

 

Next Story

தமிழிசையைக் கண்டித்த அமித்ஷா?; “நிர்மலா சீதாராமனை இதைப் போல் அமித்ஷா நடத்துவாரா” - தயாநிதி மாறன் கண்டனம்

Published on 13/06/2024 | Edited on 13/06/2024
ayanidhi Maran condemns for Amit Shah condemned Tamilization?

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் பின்பு புதுச்சேரி மற்றும் தெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில்தான் தனது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்த தமிழிசை நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜக சார்பாக மத்திய சென்னை தொகுதியில் வேட்பாளராகப் போட்டியிட்டு  படுதோல்வி அடைந்தார். 

இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, “நான் கட்சிக்காகக் கடுமையாக உழைக்கக் கூடியவர். நான் உட்கட்சி ஐடி நிர்வாகிகளை எதிர்க்கிறேன், எச்சரிக்கிறேன். தலைவர்கள் யாராவது கருத்துச் சொன்னால் அவர்களை மோசமாகப் பேச வேண்டாம். கட்சியின் பிற தலைவர்கள் மீது தவறாக எழுதினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.  நான் இங்கே தான் இருப்பேன். சிலர் ஆளுநர் பதவியை விட்டுவிட்டு ஏன் வந்தீர்கள் என்று கேட்கிறார்கள்; அதற்கு நானே கவலைப்படவில்லை உங்களுக்கு என்ன கவலை? நாங்கள் எல்லாம் இரண்டாம் இடம் வரக்கூடியவர்கள் அல்ல; வியூகம் அமைத்து கூட்டணியுடன் தேர்தலைச் சந்தித்திருந்தால் கூடுதலாகத் தொகுதிகள் பெற்றிருப்போம்” என்றார்.  இதையடுத்து நான் பாஜக தலைவராக இருக்கும் போது கட்சியில் குற்றப்பின்னணி உள்ளவர்களைக் கட்சியில் சேர்க்கவில்லை. ஆனால் தற்போது குற்றப்பின்னணி உள்ளவர்கள் தற்போது பாஜகவில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்றார்.

இது பா.ஜ.கவினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தமிழகத்தில் பாஜகவின் முன்னாள் தலைமைக்கும், இன்னாள் தலைமைக்கும் இடையே மோதல் போக்கு நிகழ்வதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் டெல்லி சென்றுவிட்டு தமிழகம் திரும்பிய தற்போதைய பாஜக தலைவர் இனிமேல் பேட்டி எல்லாம் அலுவலகத்தில் தான் கொடுப்போம். விமான நிலையத்தில் எல்லாம் பேட்டி கிடையாது. எல்லாவற்றையும் கட்சித் தலைவர்கள் முடிவு செய்து உங்களிடம் கூறுவார்கள் என்று விமான நிலையத்தில் வைத்து செய்தியாளர்களிடம் தெரிவித்துவிட்டுச் சென்றார். 

இதனிடையே, ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் பதவியேற்பு விழா நேற்று (12-06-24) ஆந்திராவில் நடந்தது. இதில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ஜே.பி.நட்டா, தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். அப்போது மேடையில் தமிழிசை அமித்ஷாவுக்கு வணக்கும் சொல்லிவிட்டுச் செல்லும்போது, அமித்ஷா உடனே அவரை அழைத்து கடுமையாகக் கண்டிக்கிறார். பதிலுக்குத் தமிழிசை எதோ கூற வரும்போது அதனை மறுத்து அமித்ஷா பேசும் வீடியோ தற்போது படுவைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. 

ayanidhi Maran condemns for Amit Shah condemned Tamilization?

தமிழிசை செளந்தரராஜனை அமித்ஷா கண்டிப்பதாகக் கூறப்படும் வீடியோ குறித்து பலரும் தங்களது கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் மத்திய அமைச்சருமான தயாநிதி மாறன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், “இது மிகவும் துர்திர்ஷ்டவசமானது. தமிழிசை செளந்தரராஜன் தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநில ஆளுநராக இருந்தவர். அவரை இப்படி நடத்துவதை நாங்கள் மோசமாக உணர்கிறோம். உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனையோ அல்லது வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரையோ இது போல் நடத்துவாரா?. தமிழிசை செளந்தரராஜன் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்பதால் அவரை எப்படி வேண்டுமானாலும் நடத்துவதா?. இது மிகவும் விரும்பத்தகாதது” என்று தெரிவித்துள்ளார். 

Next Story

நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி ஆஜர்!

Published on 14/05/2024 | Edited on 14/05/2024
Edappadi Palaniswami appears in court
கோப்புப்படம்

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பில் மத்திய சென்னை தொகுதியில் போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதியை ஆதரித்து அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “மத்திய சென்னை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் தயாநிதி மாறன் அவருடைய நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் 75 சதவீதத்தை செலவு செய்யவே இல்லை. அப்படியென்றால், இவர் எப்படி செயல்பட்டிருப்பார் என்பதை மக்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்” எனப் பேசி இருந்தார்.

இதனையடுத்து எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் எம்.பி. சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கில், “தொகுதி மேம்பாட்டு நிதியை 75% பயன்படுத்தவில்லை என சென்னை புரசைவாக்கத்தில் நடந்த அதிமுக பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசிய பேச்சு தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் உள்ளது” எனத் தெரிவித்திருந்தார். 

Edappadi Palaniswami appears in court
கோப்புப்படம்

மேலும் இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த தயாநிதிமாறன், “என் பெயருக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் பேசிய எடப்பாடி பழனிசாமி 24 மணி நேரத்தில் மன்னிப்பு கோர கால அவகாசம் வழங்கி இருந்தேன். இருப்பினும் அவர் மன்னிப்பு கோரவில்லை. ஆகையால் நீதிமன்றத்தில் கிரிமினல் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளேன். இதுவரை 95 சதவீத நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியைப் பயன்படுத்தியுள்ளேன்”எனத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு இன்று (14.05.2024) எழும்பூர் 13 வது மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதற்காக எடப்பாடி பழனிசாமி நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.  இந்நிலையில் வழக்கு விசாரணை ஜூன் 27-ந் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.