திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் இன்று மாலை 3 மணி அளவில் அறிவிக்கப்படுகிறார். இந்த நிலையில் இன்று காலை வடசென்னை நாடாளுமன்ற திமுக உறுப்பினர் கலாந்தி வீராசாமி இல்ல திருமண விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திமுக பொருளாளர் துரைமுருகன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Advertisment

udhayanidhi stalin

திருமண விழாவில் நன்றியுரை ஆற்றிய உதயநிதி ஸ்டாலின், மணமக்களுக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த நாள் மணமக்களுக்கு எப்படி வாழ்நாளில் மறக்க முடியாத நாளாக இருக்குமோ, அதைப்போல எனக்கும் இந்த நாள் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள்.

ஏன் சொல்கிறேன் என்றால், என்னை அவர்களது குடும்பத்தில் ஒருவராக நினைத்து அவர்களது இல்ல திருமண விழாவில் நன்றி உரையை ஆற்றக்கூடிய இந்த வாய்ப்பை அளித்தமைக்கு சகோதரர் கலாநிதி வீராசாமிக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். திருமண விழாவில் வருகை தந்த தலைவர், கட்சி முன்னணியினருக்கும், மணமக்கள் சொந்தங்களுக்கும், என்னுடைய நண்பர்களுக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.