Advertisment

அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்திற்கான தேதி அறிவிப்பு!

Date announced for ADMK MLAs meeting

தமிழ்நாட்டில் 6 நாடாளுமன்ற மாநிலங்களை உறுப்பினர்களின் பதவிக்காலம் ஜூன் 24ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது. அந்த வகையில் அன்புமணி ராமதாஸ், மு. சண்முகம், என். சந்திரசேகரன், எம். முகமது அப்துல்லா, பி. வில்சன் மற்றும் வைகோ ஆகிய 6 பேரின் பதவிக் காலங்கள் முடிவடைய உள்ளன. இந்த காலி பதவியிடங்களுக்கான தேர்தல் ஜூன் 19ஆம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

Advertisment

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின் படி, தேர்தலுக்கான அறிவிப்பு ஜூன் 2ஆம் தேதி வெளியிடப்படுகிறது. வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஜூன் 09ஆம் தேதி ஆகும். தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை ஜூன் 10ஆம் தேதி நடைபெறுகிறது. வேட்புமனுக்களை வாபஸ் பெறுவதற்கான கடைசி நாள் ஜூன் 12ஆம் தேதி ஆகும். வாக்கெடுப்பு ஜூன் 19ஆம் தேதி காலை 09:00 முதல் மாலை 04:00 மணி வரை நடைபெற உள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 19ஆம் தேதி (வியாழக்கிழமை) நடைபெறுகிறது.

Advertisment

இத்தகைய சூழலில் தான் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில்அதிமுகவின் துணைப் பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி இன்று (01.06. 2025) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், அதிமுக சார்பில் ராஜ்யசபா தேர்தலில் முன்னாள் எம்.எல்.ஏ. இன்பதுரை மற்றும் செங்கல்பட்டு மாவட்ட அவை தலைவர் தனபால் போட்டியிடப் போவதாக தெரிவித்துள்ளார். அதிமுகவிற்கு 2 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகள் இருக்கும் நிலையில் இரண்டிலும் அதிமுகவே போட்டி போடுவதாக இதன் மூலம் உறுதியானது.

இந்நிலையில் ஜூன் 4ஆம் தேதி (04.06.2025) அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் தலைமை கழகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. ஜூன் 19ஆம் தேதி மாநிலங்களவை வேட்பாளரை தேர்வு செய்யும் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Rajya Sabha Meeting MLA admk
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe