Date and time of Jayalalitha's; Is Sasikala guilty?

Advertisment

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.

ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில், “ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது வெளியான மருத்துவ அறிக்கைகளில் பல்வேறு முரண்பாடுகள் இருந்துள்ளன;

சாட்சியங்கள் அடிப்படையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்த நேரம் 2016 டிசம்பர் நான்காம் தேதி மதியம் 3 மணி முதல் 3.30 மணிக்குள் இருக்கலாம்” என ஆறுமுகசாமி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

மேலும் அறிக்கையில், “எய்ம்ஸ் மருத்துவக் குழு 5 முறை அப்பல்லோ வந்திருந்தாலும் ஜெயலலிதாவுக்கு முறையான சிகிச்சை அளிக்கவில்லை; சசிகலா வெளியேற்றப்பட்டு 2012-ல் மீண்டும் ஜெயலலிதாவுடன் இணைந்ததிலிருந்து இருவர் இடையே சுமூகமானஉறவு இல்லை; சசிகலாவைகுற்றம் சாட்டுவதைத் தவிர வேறு எந்த முடிவுக்கும் வர இயலாது.

அமெரிக்காவில் இருந்து வந்த டாக்டர் சமீன் சர்மா, ஜெயலலிதாவுக்கு இதய அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரைத்திருந்தார்; அமெரிக்க மருத்துவர் ஸ்டூவர்ட் ரசல் பரிந்துரைத்தபடியும் ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ செய்யப்படவில்லை.சசிகலா - ஜெயலலிதா இருவர் இடையே சுமூகமானஉறவு இல்லாததால், சுயலாபத்துக்காக ஜெயலலிதாவுக்கான ஆஞ்சியோ சிகிச்சையை சசிகலா தடுத்து இருக்கலாம்” எனவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆய்வில், “ஆய்வு வரம்பின் பிற்பகுதியை பொறுத்த வரையில் வி.கே. சசிகலா, கெ.எஸ்.சிவக்குமார், அப்போதைய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் குற்றம் செய்தவர்களாக முடிவு செய்து இவர்கள் மீது விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்” எனஅறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.