பிரபல சினிமா நடன இயக்குநர் கலா. இவர், டிடிவி தினகரன் முன்னிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இணைந்தார்.
அப்போது அவர், நான் ஆறு மாதமாக வேறொரு வேலையில் இருந்தேன். என் நண்பர்களுடன் கலாந்தாலோசித்தபோது, தினகரனின் நேர்மையான பேச்சு, அவரின் துணிச்சலான செயல்பாடுகள், எதையும் நேரடியாகச் சொல்லும் குணம் என்னைக் கவர்ந்தன.
மேலும் கட்சியில் எனக்கு என்ன பணி கொடுத்தாலும் உயிரைக் கொடுத்து வேலை செய்வேன். நான் 30 ஆண்டுகளாக சினிமா துறையில் இருக்கிறேன். எப்படி வேலை செய்வேன் என்று எல்லோருக்கும் தெரியும். அதனால் என்ன பணி என்றாலும் யோசிக்காமல் பணியாற்றுவேன் என்றார்.