Skip to main content

பா.ம.க. சார்பில் முதன் முறையாக மத்திய அமைச்சர் பதவி வகித்தவர் தலித் எழில்மலை: ராமதாஸ் இரங்கல்

Published on 06/05/2020 | Edited on 06/05/2020
Dalit Ezhilmalai



முன்னாள் மத்திய அமைச்சர் தலித் எழில்மலை மறைவுக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், பாட்டாளி மக்கள் கட்சியின் முதல் பொதுச்செயலாளரும், பா.ம.க. சார்பில் முதன்முறையாக மத்திய அமைச்சர் பதவி வகித்தவருமான தலித் எழில்மலை காலமானார் என்ற செய்தியறிந்து வேதனையடைந்தேன்.


பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்பட்ட காலத்தில் கட்சிக்காக பணியாற்றியவர். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.  

முன்னாள் மத்திய அமைச்சராக இருந்த தலித் எழில்மலை சென்னையில் இன்று மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 74. 1999 மக்களவை தேர்தலில் பாமக சார்பில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்டு எம்.பி. ஆனவர். வாஜ்பாய் தலைமையிலான மத்திய அமைச்சரவையில் சுகாதாரத்துறை இணை மந்திரியாக பதவி வகித்தார். அதன்பின்னர் அதிமுகவில் சேர்ந்த அவர், 2001ல் நடந்த மக்களவைத் தேர்தலில் திருச்சி தொகுதியில் அதிமுக சார்பிலும் வெற்றி பெற்று எம்பி ஆனார். அதன் பின்னர் முற்றிலும் அரசியலிலிருந்து ஒதுங்கியிருந்தார் தலித் எழில்மலை.
 

 

 

சார்ந்த செய்திகள்