Dalangudi DMK  candidate

அரசியல் கட்சி வேட்பாளர்கள் சிலர், தங்களுக்கு 'சீட்'கிடைத்தவுடன், விருப்ப தெய்வத்தை வழிபட்டபிறகு பிரச்சாரங்களை தொடங்கிவருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்திலும் அப்படித்தான் நடக்கிறது. ஆனால், ஆலங்குடி சட்டமன்றத் தொகுதிக்கு திமுக வேட்பாளராக மீண்டும் மெய்யநாதன் எம்.எல்.ஏ.அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று சென்னையில் இருந்து அவர் ஊருக்கு வந்தார். அப்போது, தொகுதிஎல்லையானகேப்பரையில், அவரது ஆதரவாளர்கள் அவரை வரவேற்கக் காத்திருந்தனர். வரவேற்பை ஏற்ற பிறகு,தரையில் விழுந்து மண்ணைக் கும்பிட்டு வணங்கினார் மெய்யநாதன்.

Advertisment

கடந்த தேர்தலில், நீண்ட போராட்டத்திற்குப் பிறகு சீட்டு வாங்கிக் கொண்டு வந்தபோதும் இப்படித்தான் தொகுதி மண்ணைத் தொட்டு வணங்கிச் சென்றார். இப்போதும், மண்ணைத் தொட்டு வணங்கிய பிறகே பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளார். வெற்றி நிச்சயம்என்ற நம்பிக்கையோடு அவரது பயணம் தொடங்கியுள்ளதாக உடன்இருந்தவர்கள் கூறுகின்றனர்.

Advertisment