/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/42_63.jpg)
கன்னியாகுமரி பேரூராட்சி அலுவலகத்தில் பயனாளிகளுக்கு இலவச பட்டா வழங்கும் நிகழ்வு நடந்தது. இந்நிகழ்வில் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டார்.
விழா முடிந்த பின் அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்களைச்சந்தித்தார். அப்போது பேசிய அவர், “பால்வளத்துறையில் இதற்கு முன் நடந்ததை நான் பேசவில்லை.அது நல்லதாக நடந்ததா, கெட்டது நடந்ததா எனச் சொல்ல வரவில்லை. ஆனால் என்னால் ஒரு உத்தரவாதம் தர முடியும். இன்றைக்கு நல்லாட்சி தரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின் பெயரில் பால்வளத்துறையில்இனி நல்லதே நடக்கும்.
எனக்கு என்ன வருத்தம் என்றால் ஏன் இப்படி திட்டமிட்டதாக்குதல் நடக்கிறது என்பது தான் எங்கள் கேள்வி. நிச்சயமாக இப்படி திட்டமிட்ட தாக்குதல் நடக்கிறது என்பது தான் எங்கள் கேள்வி. நிச்சயமாக எல்லோரும் பாராட்டும் விதத்தில் முதல்வர் ஆட்சிக்காலத்தில் இது ஒரு சிறந்த துறையாக விளங்கும். அதற்கு நான் முழு பொறுப்பு” எனக் கூறியுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)