விக்கிரவாண்டி இடைத்தேர்தலின் வெற்றிக்கு பின்பு சிவி சண்முகம் பேட்டி அளித்துள்ளார். அவர் "விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக திமுக நேரடியாக மோதியது, அதில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது, இந்த வெற்றி ஸ்டாலினுக்கு சரியான பாடம் கற்பித்துள்ளது, ஸ்டாலின் மக்களை முட்டாள்கள் என நினைத்து இருக்கலாம், தெளிவான தீர்ப்பு கொடுத்துள்ளனர்.

CV Sanmugam press meet

Advertisment

Advertisment

நாங்கள் ஏற்கனவே சொல்லியது போல நாடாளுமன்ற தேர்தல் மற்றும் வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் பல்வேறு காரணங்களால் வெற்றி கைநழுவி போனது, இந்த தேர்தல் முக்கியமான தேர்தல் நாட்டில் மக்களை பாதிக்கும் எந்த நிகழ்வும் இல்லை, தெளிவாக தமிழகத்தை யார் ஆளவேண்டும் என தீர்ப்பு கொடுத்துள்ளனர், வெற்றிக்கு பாடுபட்ட கூட்டணி கட்சியினருக்கு நன்றி இந்த வெற்றி அதிமுக தொண்டர்கள் வெற்றி, அவர்களின் பாதம் தொட்டு நன்றி தெரிவித்து கொள்கிறேன்" என அவர் தெரிவித்தார்.

மேலும் விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக சட்டமன்ற உறுப்பினர் முத்தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் வெற்றிக்கான சான்றிதழை வழங்கினார்