Advertisment

“தற்போது சம்பந்தப்பட்ட அமைச்சர் நீட் தேர்வுக்கு தயாராக சொல்கிறார்” - பா. வளர்மதி கண்டனம்!

திமுக அரசைக் கண்டித்து அதிமுக மகளிர் அணிச் செயலாளர் பா. வளர்மதி தலைமையில் கே.கே.நகர் சிவன் பார்க்கில் நேற்று (28.07.2021) ஆர்ப்பாட்டம்நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர் கூறியதாவது, “தமிழகத்தில் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு மக்களிடம் பொய்யான வாக்குறுதிகளைக் கூறி கடந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்திருக்கிறது. அதில் மிக முக்கியமான ஒன்று, மக்கள் மத்தியில் சொன்ன பொய்யான வாக்குறுதிகள். அதிலும் தாங்கள் ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வைக் கண்டிப்பாக ரத்து செய்வோம் என அவரும் அவர் கட்சியைச் சார்ந்தவர்களும் எல்லா இடங்களிலும் பிராச்சாரம் செய்யும்போது மக்களிடம் கூறினார்கள்.

Advertisment

இன்றுடன் அவர்கள் ஆட்சிக்கு வந்து இரண்டரை மாதங்கள் ஆகிவிட்டன. ஆனால் தற்போது அதைப் பற்றிய பேச்சே இல்லை. மேலும், மாற்றி மாற்றி பேசிவருகின்றனர். தற்போது திமுகவில் உள்ள அமைச்சர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சர் நீட் தேர்வுக்குத் தயாராகுங்கள் என்று சொல்கிறார். ஆட்சிக்கு வந்ததும் முதல் வேலையாக நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று சொல்லிஆட்சிக்கு வந்தார்கள். ஆனால் தற்போது அதற்காக ஒரு குழு அமைத்திருக்கிறோம். அந்தக் குழு நடவடிக்கை எடுக்கும் என கூறுகிறார்கள். இவ்வாறான பொய்யான வாக்குறுதிகளை மக்களிடத்தில் தெரிவித்துள்ளார்கள் என்பதைக் கண்டித்து தற்போது கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதேபோல் அனைத்து பெண்களுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் தருவதாக கூறினார்கள்.

Advertisment

ஆட்சிக்கு வந்ததும் பலருக்கும் வேலை தருவதாக கூறினார்கள். இதுபோன்ற பல பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்திருக்கின்றனர். ஆட்சிக்கு வந்து இரண்டரை மாதம் நிறைவடைந்துள்ளது ஆனால் எதுவும் செய்யவில்லை. மேலும், இதை இந்த குறிப்பிட்ட மாதங்களுக்கு நடைமுறைக்கு கொண்டு வருவது கடினம்தான். ஆனால் அவர்கள் ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று கூறினார்கள். ஆனால் தற்போது குழு அமைத்திருக்கிறோம் என கூறுவதுதான் கண்டிக்கத்தக்கது. தற்போதைய நிலைக்கு நீட் தேர்வு ரத்து என்பது மிகவும் முக்கியமானதாகும்.” என கூறினார்

Condemned pa.valarmathi
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe