அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், வரும் 11ம் தேதி நடக்கவிருக்கும் பொதுக்குழுவுக்கு தடைவிதிக்கக் கோரி ஓ.பி.எஸ். சார்பில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு அந்த வழக்கு விசாரணை நேற்று (8ம் தேதி) முடிவடைந்துள்ளது. இந்த வழக்கின் மீதான தீர்ப்பை நீதிமன்றம் பொதுக்குழு நடக்கும் என அறிவிக்கப்பட்டிருக்கும் 11ம் தேதி காலை 9 மணிக்கு வெளியிடப்படும் எனத் தெரிவித்துள்ளது. இதனால், இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். ஆகியோர் தரப்புகளில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், கடலூர் மாவட்டத்தில் இருந்து ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் அவரைச் சந்திக்க சென்னை வந்தனர். அவர்களை ஓ.பி.எஸ் இன்று சந்தித்தார். முன்னதாக ஓ.பி.எஸ்-ஐ சந்திக்க அவரது ஆதரவாளர்களான வைத்திலிங்கம் உள்ளிட்டோர் அவரது வீட்டுக்கு வந்தனர்.