Advertisment

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் வாக்குப்பதிவு..!  

CPM K Balakrishnan cast his vote

தமிழகத்தில் 2021 சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு என்பது தொடங்கியுள்ளது. தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற இருக்கிற நிலையில், 1.5 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 3,585 ஆண் வேட்பாளர்களும், 411 பெண் வேட்பாளர்களும், இரண்டு மூன்றாம் பாலினத்தவரும் என மொத்தம் 3,998 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

Advertisment

பொதுமக்களும் காலை முதல் தங்களது வாக்குகளை செலுத்த தீவிரம் காட்டிவருகின்றனர். அதேபோல் அரசியல் கட்சி தலைவர்களும், நிர்வாகிகளும், திரைத்துறை நட்சத்திரங்களும் தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், சிதம்பரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அவரது வீட்டின் அருகே உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் அவரது வாக்கை காலை 7:40 மணிக்கு பதிவு செய்தார். அவருடன் அவரது மனைவியும் கட்சியின் மாநில குழு உறுப்பினருமான ஜான்சிராணியும் தனது வாக்கை பதிவு செய்தார்.

Advertisment

tn assembly election 2021 Balakrishnan cpim
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe