Advertisment

சி.பி.ஐ.எம். முதுபெரும் தலைவர் சங்கரய்யா 100வது பிறந்தநாள்.. தலைவர்கள் நேரில் வாழ்த்து (படங்கள்) 

Advertisment

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவரும், விடுதலைப் போராட்ட வீரருமான என். சங்கரய்யா இன்று (15.7.2021) தனது 100வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவரது நூற்றாண்டையொட்டி, சி.பி.ஐ.எம். கட்சியினர் தமிழ்நாடு முழுவதும் கொண்டாடிவருகின்றனர். அதேபோல், சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் அவரை நேரில் சந்தித்து தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். அதேபோல், சி.பி.ஐ.எம். கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், உள்ளிட்டோரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

மேலும், சென்னை குரோம்பேட்டை தபால் அலுவலகம் அருகில் கல்வெட்டு திறப்பு மற்றும் கொடியேற்றும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் பல்லாவரம் நகராட்சி அலுவலகம் அருகில் நடைபெற்ற கல்வெட்டு திறப்பு மற்றும் கொடியேற்றும் நிகழ்ச்சியில் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கலந்துகொண்டு கல்வெட்டை திறந்துவைத்து கொடியேற்றினார். அதேபோல், சங்கரய்யாவின் இல்லத்தில் அக்கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கொடியேற்றினார்.

sankarayya
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe