Advertisment

இரு கம்யூனிஸ்ட்டுகளும் கேட்கும் தொகுதிகள்!

cpim - cpi

Advertisment

வருகிற நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை திமுக தொடங்கிவிட்டது. கூட்டணி கட்சிகளுடன் பேசுவதற்கு கட்சியின் பொருளாளரான துரைமுருகன் தலைமையில் குழு அமைத்து அறிவித்துவிட்டது.

இந்த நிலையில் ஏற்கனவே கூட்டணியில் காங்கிரஸ் உள்ளது. தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் என அரசியல் கட்சிகள் கூட்டணியில் இணைய உள்ளது.

இதில் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் பிப்ரவரி மாதம் இரண்டாம் வாரத்தில் திமுக குழுவுடன் பேச்சுவார்த்தையை தொடங்கி, திமுக கூட்டணியில் முறைப்படி இணைகிறது. இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும், இதற்காக உயர்மட்ட குழு கூட்டத்தை நடத்தியுள்ளது. சிபிஎம் சார்பில் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன், ஜி.ராமகிருஷ்ணன், உ.வாசுகி உள்பட ஒரு குழுவினர் அமைக்கப்படுகிறார்கள். அதேபோல் இந்திய கம்யூன்ஸட் கட்சியின் சார்பில் மாநிலச் செயலாளர் முத்தரசன், சி.மகேந்திரன், திருப்பூர் சுப்பராயன் உள்பட ஒரு குழு அமைக்கப்பட உள்ளது.

Advertisment

தற்போதைய நிலையில் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் தலா 3 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என திமுகவை கேட்க உள்ளனர். அதில் நாகை, திருப்பூர், தென்காசி, வடசென்னை, கிருஷ்ணகிரி ஆகிய தொகுதிகளை பட்டியலிட்டுள்ளது சிபிஐ.

கோவை, மதுரை, குமரி, சிதம்பரம், திண்டுக்கல் ஆகிய தொகுதிகளை சிபிஎம் தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என திமுகவிடம் பட்டியல் கொடுக்க உள்ளது. கோவை, திருப்பூர், நாகை ஆகிய 3 தொகுதிகளும் இருகட்சிகளின் பட்டியலிலும் உள்ளது.

Alliance cpi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe