
கரோனா ஊரடங்கில் வேலை இழந்த அனைத்து குடும்பங்களுக்கும் மத்திய அரசு ரூ 7,500 மாநில அரசு ரூ 5,000-ம் உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி சிதம்பரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாநிலச்செயலாளர் கே. பால கிருஷ்ணன், மாநிலக்குழு உறுப்பினர் மூசா, சிதம்பரம் நகரச் செயலாளர் ராஜா, மாவட்ட குழு உறுப்பினர் முத்து, நகர் குழு உறுப்பினர் செந்தில் உள்ளிட்ட கட்சியினர் கலந்து கொண்டு நோய்த்தொற்று பரவாமல் இருக்க தடுப்பு மாத்திரைகள் வழங்கிடு, நோய்க் காலம் முடியும் வரை ரேஷன் கடையில் அரிசி, பருப்பு, எண்ணெய் இலவசமாக வழங்கவேண்டும்.
100 நாள் வேலையை 200 நாளாக மாற்றி அனைத்துப் பகுதி மக்களுக்கும் வேலை கொடுக்க வேண்டும், மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்களிடம் பெற்றுள்ள அனைத்து சுய உதவிக்குழுக்களின் கடன்களை அரசு செலுத்த வேண்டும், வட்டி கேட்டுத் தொல்லை செய்யும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், முறைசாரா தொழிலாளர்கள் அனைவருக்கும் அரசு நிவாரணங்களை வழங்க வேண்டும் எனக் கோஷங்களை எழுப்பினார்கள்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)