Advertisment

தொட்டு வணங்கச் சென்ற பாஜக எம்பியை இருமுறை எட்டி உதைத்த பசு

A cow kicked a BJP MP who was touching and bowing twice

பசு மாட்டை தொட்டு வணங்க முயன்ற பாஜக நாடாளுமன்ற உறுப்பினரை பசு மாடு எட்டி உதைத்த காட்சி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

Advertisment

ஆந்திர மாநிலம் குண்டூரில் காய்ந்த மிர்ச்சி விற்பனை மற்றும் ஏற்றுமதி சந்தையில் மிளகாய் ஏற்றுமதியாளர் சங்க அலுவலக திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் ஜிவிஎல் நரசிம்மராவ் சென்றிருந்தார். நிகழ்ச்சி முடிந்ததும் வளாகத்தில் கட்டப்பட்டு இருந்த பசு மாட்டை தொட்டு வணங்க அதன் அருகில் எம்.பி நரசிம்மராவ் சென்றார்.

Advertisment

திடீரென மிரண்ட பசுமாடு தொட வந்தவரை பின்னங்காலால் எட்டி உதைத்தது. பின் பசு மாடு தான் கட்டப்பட்டு இருந்த கம்பத்தை சுற்றி வந்தது. எம்.பி நரசிம்மராவ் மீண்டும் பசு மாட்டை தொட்டு வணங்க முயன்ற போது மீண்டும் அவரை பசுமாடு எட்டி உதைத்தது.

இது குறித்த வீடியோ பதிவு இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. மேலும் பாஜகவின் நாடாளுமன்ற உறுப்பினரை பசு ஒன்று எட்டிமிதித்த சம்பவம் அப்பகுதியில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியது.

Andhra
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe