/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/JEYAKUMAR.jpg)
அதிமுகவின் வழக்கறிஞர் பிரிவு செயலாளரும், ராஜ்யசபா எம்.பி.யுமான நவநீத கிருஷ்ணனிடமிருந்து வழக்கறிஞர் பிரிவு செயலாளர் பதவி அதிரடியாக பறிக்கப்பட்டிருக்கிறது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ்சும் இணைந்து இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
இந்த செய்தி அதிமுக வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கான பின்னணியில் ஏகப்பட்ட அரசியல் காரணங்கள் இருக்கின்றன என கட்சியினர் மத்தியில் பரவலாக பேசப்படுகிறது.
இந்நிலையில் இதுகுறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். அப்போது அவர் பேசுகையில், “அறிவாலயத்திற்கு செல்வது அரசியல் நாகரிகமா? எம்.ஜி.ஆர் அவர்களால் தீய சக்தி என்று அடையாளம் காண்பிக்கப்பட்டது திராவிட முன்னேற்ற கழகம். அவர்களுடைய அலுவலகம் அறிவாலயம், அங்கு சென்று காலை மிதிப்பது என்பது எவ்வளவு பெரிய ஒரு அவமானமான செயல்.
அங்கேகாலை மிதித்துவிட்டு,திமுக எம்.பியை பாராட்டி பேசுவது கட்சியை கலங்கடிக்கும் செயல். இதை எப்படி அனுமதிக்க முடியும் எனவே உரிய நடவடிக்கை உரிய நேரத்தில் எடுக்கப்பட்டு பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். யாராக இருந்தாலும் சரி, கட்சியில் இருந்துகொண்டு கட்சியை கலங்க படுத்துகின்ற வேலை செய்தால்நிச்சயமாக இது போன்ற நடவடிக்கைகள் தொடரும்” எனத் தெரிவித்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)