“The courage to do anything to anyone; This is its manifestation” - Annamalai

மதுரை மாவட்டத்தில் இன்று (08/11/2022) தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார்.

Advertisment

அப்போது அவர் பேசியதாவது, “கோவை குண்டு வெடிப்பு இந்த அளவிற்கு இந்தியாவில் பேசுபொருளாகி இருப்பதற்கு பாஜகதான் காரணம். ஊடகங்கள் அதைவிட முக்கியக் காரணம். நீங்கள் பேசியதால் தான் மக்களுக்கு இது தீவிரவாதத்தாக்குதல் என்பது தெரிந்தது. அதனால் ஆர்.எஸ்.பாரதி அரசியலுக்காகப் பேசுகிறார். உண்மையாகவே அவர் பாஜகவிற்கு நன்றிக்கடன் பட்டிருக்க வேண்டியவர்.

Advertisment

மதுரையில் கல்லூரி மாணவர்கள் செய்த காட்சிகளை நாம் பார்த்தோம். அந்த மாணவர்களின் வீடியோ காட்சிகளைநீங்கள் பார்த்திருப்பீர்கள். போதைப் பொருட்கள் பயன்படுத்துவது கல்லூரி மாணவர்களிடையே மிக அதிகமாக உள்ளது. போதைப் பொருளை எடுத்துக்கொண்ட உடன் எங்கிருந்தோ தைரியம் வருகிறது. யாரை வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற தைரியம். அதன் வெளிப்பாடுதான் கல்லூரி மாணவர்களின் செயல்.

கட்டுக்கோப்பாக இருந்த தமிழகத்தில் இந்த மதுவும், கஞ்சாவும் வந்து மொத்தமாக இளைஞர்களைச் சீரழித்து வருகிறது. அதுமட்டுமின்றி காவல்துறையின் கைகளைக் கட்டிப்போட்டுள்ளார்கள். இதற்கு முன் காவல்துறையினர் சாலைகளில் லத்திகளைக் கைகளில் வைத்துக்கொண்டு இரண்டு அடிகளை அடிப்பார்கள். நான் கல்லூரியில் படிக்கும்போது பார்த்துள்ளேன். அப்படி இருக்கும்போதுதான் காவல்துறையின் மீது பயம் இருந்தது.” எனக் கூறினார்.