sasikala - ttv dinakaran

Advertisment

நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் 22 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலிலும் அமமுக தோல்வியை சந்தித்தது. இதையடுத்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை சந்திக்க கடந்த 25ஆம் தேதி சென்றுள்ளார். அப்போது விவேக்கும் இளவரசியை சந்திக்க சென்றார்.

இவர்கள் அனைவரும் ஒன்றாக பேசிக்கொண்டிருந்தபோது, தேர்தல் செலவுகளுக்காக தினகரனிடம் 1500 சி கொடுத்ததாக தெரிவித்திருக்கிறார் விவேக். அப்போது சசிகலா, போட்டியிட்ட வேட்பாளர்கள் டெபாசிட்டே வாங்கவில்லை. அப்படியிருக்கும்போது என்ன செலவு என்பதை கணக்கு கொடுக்கும்படி தினகரனை கேட்டுள்ளார் சசிகலா.

அப்போது அமமுகவில் இருந்து சிலர் அதிமுகவுக்கு செல்வதையும் சொல்லியுள்ளனர். அதற்கு சசிகலா, இன்னும் ஒரு வருடத்தில் நான் வெளியே வந்துவிடுவேன். அதுவரை இருப்பவர்களையாவது தக்க வைக்க பாருங்கள். தான் வெளியே வந்தவுடன் மற்றவற்றை பார்த்துக்கொள்ளலாம் என கூறியுள்ளாராம்.