Advertisment

வேட்பாளர்கள் தேர்வில் ஊழல்? - காங்கிரஸில் கலகக் குரல்கள்! 

Corruption in the selection of candidates

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 25 சீட்டுகள் ஒதுக்கப்பட்டன. தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்ட பிறகு, வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் பணிகளில் வேகம் காட்டிய மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி, வேட்பாளர்கள் பட்டியலை டெல்லிக்கு அனுப்பி வைத்திருக்கிறார். அந்தப் பட்டியலை காங்கிரஸ் தேர்தல் பணிக்குழுவினர் பரிசீலித்து வருகிறார்கள். வேட்புமனு தாக்கலுக்கு இன்னும் 5 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், வேட்பாளர்களை விரைந்து அறிவிக்க ராகுல்காந்தி உத்தரவிட்டிருக்கிறார்.

Advertisment

இந்த நிலையில், வேட்பாளர்கள் தேர்வில் வெளிப்படைத்தன்மையும் நேர்மையும் இல்லை என்றும், சீட்டுகள் விலை பேசி விற்கப்பட்டுள்ளன என்றும் அக்கட்சியினர் தெரிவித்தனர். தேர்வு செய்யப்பட்டுள்ள வேட்பாளர் பட்டியலைக் கண்டிக்கும் விதமாக,காங்கிரஸ் செயல்தலைவரான விஷ்ணுபிரசாத் எம்.பி., காங்கிரஸின் தலைமையகமான சத்தியமூர்த்திபவனில்உண்ணாவிரதப் போராட்டத்தை இன்று காலைதுவக்கினார்.இந்தப் போராட்டம் காங்கிரஸ் கட்சியில்அதிர்ச்சிகளை ஏற்படுத்த, டெல்லிவரை எதிரொலித்திருக்கிறது.

Advertisment

ddd

போராட்டத்தைக் கைவிடுமாறு விஷ்ணுபிரசாத்திடம் டெல்லி தலைமை அறிவுறுத்தியிருக்கிறது. இந்த நிலையில், “தொகுதிகள் மற்றும் வேட்பாளர்கள் தேர்தலில் வெளிப்படைத்தன்மை இல்லை. நிறைய தவறுகள் நடக்கின்றன. உண்மையான கட்சி விசுவாசிகளுக்கு இழைக்கப்படும் துரோகத்தைக் கண்டு என் ரத்தம் கொதிக்கிறது. எதிரிகளை மட்டுமல்ல துரோகிகளையும் எதிர்கொள்ளும் வலிமை நமக்கு வேண்டும்” என கலகக் குரல் எழுப்பியிருக்கிறார் ஜோதிமணி எம்.பி. இதேபோல, காங்கிரஸ் மகளிர் அணியைச் சேர்ந்தவர்களும் வேட்பாளர் பட்டியலுக்கு எதிராகக் கட்சியின் அகில இந்தியத் தலைமைக்குப் புகார் வாசித்தபடி இருக்கிறார்கள். காங்கிரஸ் என்றாலே கலகம் தான். அதுவும் தேர்தல் காலம் என்றால் கலகத்துக்குச் சொல்லவா வேண்டும்?

Vishnu Prasad congress
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe