Robots

மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளை தமிழகத்தில் சிறப்பாக செயல்படுத்தும் முதன்மை மாநகரமாககோவை உள்ளது என, மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகம் பாராட்டியுள்ளது.

Advertisment

தமிழ்நாட்டின் தொழில் நகரம் என்று அழைக்கப்படும் கோவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தொடர்ந்து வளர்ச்சிப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இத்திட்டத்தின் கீழ் அண்மையில் நிறைவுற்ற கோவை உக்கடம் பெரியகுளக்கரை நவீனபூங்காவை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்து, கோவை மாநகராட்சிக்கு பாராட்டு தெரிவித்தார். இதை தொடர்ந்து கோவை மாநகரில் கழிவு நீர் தொட்டிகள் மற்றும் பாதாள சாக்கடைகளில் அடைப்புகளை எந்திரம் மூலம் அகற்றுவதற்காக ரோபோக்களை பயன்படுத்தும் முறையை தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்.

Advertisment

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, ’’பாதாள சாக்கடைக்குள் மனிதர்கள் இறங்கி அடைப்புகளை அகற்றும் முறையை முற்றிலும் ஒழிக்கும் நோக்கில், இப்பணியில் ரோபோக்களைபயன்படுத்தும் திட்டம் அனைத்து மாநகராட்சிகளிலும் விரிவுபடுத்தப்படும். கோவை மாநகராட்சியில் மொத்தமுள்ள 5 மண்டலங்களிலும் தலா இரண்டு ரோபோக்கள் வீதம், மொத்தம் 10 ரோபோக்கள் பயன்பாட்டில் உள்ளன’’ என்றார்.

இதனையறிந்து, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கழிவு நீர் தொட்டிகள் மற்றும் பாதாள சாக்கடைகளில் அடைப்புகளை எந்திரம் மூலம் அகற்றுவதற்காக ரோபோக்களை பயன்படுத்தும்முறையை செயல்படுத்தியுள்ள கோவை மாநகராட்சியை மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகம் ட்விட்டர் வழியாக பாராட்டியுள்ளது.

Advertisment

மனிதர்கள் மூலம் சாக்கடை கழிவுகளை அகற்றும் முறையை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கிலும், தூய்மைப் பணியாளர்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் வகையிலும் கோவை மாநகராட்சி ரோபோக்களை (Robotic Machines- Bandicoot V2.0) பயன்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சாக்கடை கழிவுகளை சுத்தம் செய்யும் பணிகளில் மனிதர்களின் செயல்பாடுகள் இல்லாத வகையில், உருவாக்கப்பட்ட இந்த ரோபோ (The bandicoot Robot), மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் வடிவமைக்கப்பட்டது என்றும் மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை குறிப்பிட்டுள்ளது.

இந்த ரோபோக்கள் பயன்படுத்தும் திட்டம் மற்ற நகரங்களுக்கு சிறந்த உதாரணமாக இருக்கும் என்றும் இத்திட்டத்தை பின்பற்றி, தூய்மைப் பணியாளர்களின் வேலைகளை மேம்படுத்தி, பாதாள சாக்கடை குழிக்குள் மனிதர்கள் இறங்கி அடைப்புகளை அகற்றும் முறையை முழுமையாக ஒழிக்க வேண்டும் என்றும் மத்திய அரசு தெரிவித்து இருக்கிறது.

மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறையின் பாராட்டை பெற்ற கோவை மாநகராட்சிக்கு வாழ்த்துகளையும், கோவையை மற்ற நகரங்களுக்கு சிறந்த முன்னுதாரணமாக முன்னிலைப்படுத்தியமத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகத்துக்கு தனதுநன்றியையும்ட்விட்டரில் தெரிவித்திருக்கிறார் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி. மேலும், இந்த திட்டத்தை (பாதாள சாக்கடை அடைப்புகளை அகற்ற ரோபோக்கள் பயன்படுத்துதல்) தமிழகத்தின் மற்ற மாநகராட்சிகளிலும் செயல்படுத்த திட்டமிட்டு வருவதாகவும் கூறியுள்ளார்.

"முதல்வர் எடப்பாடி பழனிசாமி மனது வைத்தால் அனைத்து மாநகராட்சிகளிலும் கழிவுகளை அகற்ற ரோபோக்களின் பயன்பாட்டை நடைமுறைப்படுத்தி, மனித கழிவுகளை அகற்ற மனிதர்களைப் பயன்படுத்தும் அவலங்களை அகற்ற முடியும்" என்கிறார்கள் மாநகராட்சி அதிகாரிகள்.