Advertisment

கரோனாவிற்கு மருந்து கண்டுபிடிக்காத நிலையில் தனியார் மருத்துவமனைக்கு ஏன் அனுமதி? அதிருப்தியில் மருத்துவர்கள்!

admk

தனியார் மருத்துவமனையில் சாதாரண சிகிச்சை, சிறப்புசிகிச்சைக்கு அரசாங்கத் தரப்பிலிருந்து கட்டணம் விதிக்கப்பட்டிருப்பதோடு, அரசு காப்பீட்டுத் திட்டத்திலும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை என்று எடப்பாடி அரசு அறிவித்து இருந்தது. இதனையடுத்து கரோனாவுக்கு இன்னும் மருந்து இல்லாத நிலையில், எதற்கு இவ்வளவு கட்டணம், அதை ஏன் அரசுக் காப்பீட்டுத் திட்டத்திலிருந்து தனியாருக்குத் தர வேண்டும் என்று மருத்துவத்துறை வட்டாரத்தில் நிறைய கேள்விகள் கேட்டு வருகின்றனர்.

Advertisment

இதற்கிடையில் தலைமைச் செயலாளர் சண்முகம் ஓய்வுபெற இருந்ததால் பதவி நீட்டிப்பை எடப்பாடியிடம் எதிர்பார்த்து இருந்தார். ஆனால் எடப்பாடி அதில் ஆர்வம் காட்டவில்லை. அதனால் கரோனா நேரத்தில் புதிதாய் ஒருவரை அந்தப் பதவியில் அமர்த்துவது குழப்பத்தை ஏற்படுத்தும் என்று தனது டெல்லி சோர்ஸுகள் மூலம் மத்திய அரசுக்கு பிரஷர் கொடுத்து 3 மாத பதவி நீட்டிப்பை வாங்கிவிட்டார் சண்முகம். இதனால் எடப்பாடிக்கும் அவருக்கும் இடையில் இருந்த இணக்கம் இப்போது காணாமல் போயிருக்கிறது என்று அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

Advertisment

Doctors issue coronavirus admk
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe