Advertisment

கரோனாவிலிருந்து பாதுகாக்க மூன்றெழுத்து தடுப்பு மந்திரம்! - அமைச்சர் வேலுமணி யோசனை!

Advertisment

தமிழகத்தில் கரோனா பரவலை தடுக்கவும் அதுபற்றி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் கடந்த மார்ச் மாதத்திலிருந்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தலின் பேரில் மாநிலம் முழுவதும் பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது தமிழக உள்ளாட்சித் துறை.

மக்களின் வாழ்வாதாரம் கருதி தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ள நிலையிலும், கரோனா பரவலை தடுக்க, தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கைகளால் கரோனா பாதிப்பின் எண்ணிக்கை குறைந்து வருவதாகச் சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், தீபாவளிப் பண்டிகையையொட்டி, பொது இடங்களில் மக்கள் கூடும்போது உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறார்.

Advertisment

இதுதொடர்பாக, தமது சமூக வலைதளப்பக்கங்களில் 'மூன்றெழுத்து மந்திரம்' என கரோனாவிலிருந்து பாதுக்காத்துக் கொள்ள முன்னெச்சரிக்கை மந்திரத்தை மேற்கொள்ளவேண்டும் என்பதை வலியுறுத்தி பரப்புரை மேற்கொண்டுள்ளார். அந்த மூன்றெழுத்து மந்திரமாக 'அறம்', 'கைகள்', 'தனிமை', 'தூரம்', 'காலம்', 'தூய்மை', 'செயல்' என மூன்றெழுத்து மூலம் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை, எளிய முறையில் விளக்கி மக்களிடையே பரப்புரையில் ஈடுபட்டுள்ளார் வேலுமணி!

'அறம்' பற்றி அவர் குறிப்பிடுகையில், நமக்கு நோய்த் தொற்று வராமல் இருக்க விழைவது மட்டுமின்றி, நம்மைச் சுற்றி இருப்போரும் நலமாக வாழ, முகக்கவசம், சமூக இடைவெளி போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பிறரின் நலனிலும் அக்கறை காட்டுவதே சிறந்த அறமாகும்.

'கைகள்' பற்றி குறிப்பிடுகையில், கைகளை அடிக்கடி கழுவுதல், சுகாதாரமாக வைத்துக் கொள்ளுதல், கை குலுக்குவதை தவிர்த்தல், இவையாவும் நம்மைத் தொற்றிலிருந்து காத்து, நமக்கு கை கொடுக்கும் நல்ல பழக்கங்களாகும் என்றும் 'தனிமை' பற்றி விளக்கும்போது, முடிந்தவரை பாதுகாப்பாக இருக்க வேண்டும். ஒருவேளை தொற்று ஏற்பட்டால், மருத்துவருடன் கலந்தாலோசித்து முறையாகத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். இதனால், இந்தநோய்த்தொற்றை பெருமளவு நம்மால் பரவாமல் தடுக்க முடியும் என விளக்குகிறார்.

cnc

இதனையடுத்து, 'தூரம்' பற்றி அவர் பேசும் போது, அவசியமாக வெளியே செல்லும்போது மட்டும் வெளியே செல்வது, அப்போதும் சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது நமக்கும், நம்மைச் சுற்றி இருப்பவர்களுக்கும் தொற்று பரவாமல் இருக்க பெரிதும் உதவி செய்யும் எனத் தெரிவிக்கிறார்.

'காலம்' பற்றி தெரிவிக்கையில், அடிக்கடி கைகளை கழுவுவது, வெளியிலிருந்து வந்தவுடன் நீராவி பிடிப்பது முகக் கவசத்தை சுத்தம் செய்வது உடைகளை மாற்றுவது போன்ற சுகாதாரமான பழக்கங்களை நேரம் கடத்தாமல், உடனுக்குடனே செய்ய வேண்டும். ஆக, இந்த மூன்று எழுத்து மந்திரங்களான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளே நம்மை நோய்த் தொற்றிலிருந்து பாதுகாக்கும் என்று சுட்டிக்காட்டி பரப்புரை செய்து வருகிறார் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி.

admk corona virus s.p.velumani
இதையும் படியுங்கள்
Subscribe