Advertisment

கரோனா மரணத்தில் பொய்க்கணக்கு! -மு.க.ஸ்டாலின் விளாசல்! 

mks

கரோனா வைரஸை கட்டுப்படுத்துவதில் எடப்பாடி அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளில் பல்வேறு முறைகேடுகள் அவ்வப்போது அம்பலமாகி வருகின்றன. கரோனாவால் மரணமடைவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், ஆனால், அவைகள் மறைக்கப்பட்டு விடுகின்றன என்றும் சமீபகாலமாக குற்றச்சாட்டிகள் எதிரொலித்தபடி இருக்கிறது.

Advertisment

இந்த நிலையில், கரோனா மரணத்திலும் பொய்க்கணக்கு எழுதப்பட்டுள்ளது என முதல்வர் எடப்பாடியை கண்டித்து ட்விட்டரில் பதிவு செய்திருக்கிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

Advertisment

இது தொடர்பாக ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “கரோனா மரணத்திலும் பொய்க்கணக்கு எழுதப்பட்டுள்ளது. உயிரிழப்புகளின் எண்ணிக்கை ஒரே நாளில் 3,144 ஆக உயர்ந்தது எப்படி,கரோனா மரணத்தை மறைப்பது எவ்வளவு மோசமான விஷயம். கரோனா மரணத்தை மறைத்ததற்காக முதல்வர் இ.பி.எஸ்.மன்னிப்பு கேட்க வேண்டும். மறைக்க முடியாத அளவுக்கு மரணங்களின் எண்ணிக்கை அதிகமானதால் வெளியே சொல்லி விட்டார்கள். கரோனா மரணத்தை போல், கரோனா கால ஊழல்களும் விரைவில் வெளிச்சத்திற்கு வரும்”என்று குற்றம் சாட்டியிருக்கிறார்.

corona tngovt
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe