Advertisment

கரோனா பிணங்களை எரிப்பதை இலங்கை அரசு நிறுத்த வேண்டும்! மு.தமிமுன்அன்சாரி

Thamimum Ansari

Advertisment

கரோனா பிணங்களை எரிப்பதை இலங்கை அரசு நிறுத்த வேண்டும் என மு.தமிமுன் அன்சாரி கூறியுள்ளார்.

மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் கரோனா தொற்றால் உயிரிழந்தவர்களை எரிக்க வேண்டும் என இலங்கை அரசு அறிவித்து அதன்படி முயற்சிகளை செய்து வருகிறது.

உலகம் எங்கும் இத்தகைய பிணங்களை 10 அடிக்கும் ஆழமான குழிகளில் புதைக்க வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் வழிகாட்டியுள்ளது.

Advertisment

இந்நிலையில் இறந்தவர்களை புதைக்கும் வழக்கம் கொண்ட முஸ்லிம்கள் உள்ளிட்ட இதர மக்களின் கலாச்சாரத்திற்கு இடையூறு செய்யும் வகையில் இலங்கை இனவாத அரசு கரோனாவால் உயிரிழந்தவர்களின் பிணங்களை எரிப்பது அங்கே கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது.

வேண்டுமென்றே சர்வதேச விதிகளுக்கு புறம்பாக இலங்கை இனவாத அரசு இத்தகைய நெருக்கடிகளை ஏற்படுத்தியிருப்பதாக, மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

இதனால் கரோனா தொற்றுக்கு ஆளானவர்கள் மருத்துவமனைக்கு செல்ல அஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இது நோய் தொற்றை அதிகரிக்க செய்யும் எனவும் அங்கிருந்து வரும் தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன.

கரோனா நெருக்கடியிலும் தங்களின் இனவாத அராஜகங்களை, இலங்கை அரசு முன்னெடுப்பதாக அங்கே மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இலங்கை அரசு அங்கு வாழும் அனைத்து சமூகத்தின் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்குமாறும், உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டல்படி கரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை புதைக்க வேண்டும் என விரும்பும் முஸ்லிம்கள் உள்ளிட்ட இதர மக்களின் உணர்வுகளுக்கும், கோரிக்கைகளுக்கும் மதிப்பளிக்குமாறும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.இவ்வாறு கூறியுள்ளார்.

corona virus srilanka THAMIMUN ANSARI
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe