Advertisment

கரோனாவினால் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யும் ஃபாப்புலர் ஃப்ரண்ட் தன்னார்வலர்கள் 

சென்னை மண்ணடியை சார்ந்த 55 வயது நபர் கரோனா தொற்றினால்இன்று (17-06-2020) உயிரிழந்தார். அவரது குடும்பத்தார் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதால் பாப்புலர் ஃப்ரண்டின் தன்னார்வலர்கள் அவருக்கான இறுதி சடங்கை நிறைவேற்றி ராயப்பேட்டை அடக்கஸ்தளத்தில் கண்ணியமான முறையில் அடக்கம் செய்தனர்.

Advertisment

கரோனா தொற்றினால் இறந்தவர்களை அடக்கம் செய்ய நெருங்கிய உறவினர்களே அச்சம் காரணமாக முன்வருவதில்லை. சில நேரங்களில் கரோனா தொற்று காரணமாக இறந்தவர்களின் குடும்பத்தினர் தனிமைப்படுத்தி வைத்திருப்பதால் அவர்களால் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய முடியாத சூழல் உள்ளது. கரோனா தொற்றினால் இறந்தவர்களின் உடல் கண்ணியமான முறையில் அவர்களின் மத நம்பிக்கைபடி அடக்கம் செய்யப்படவேண்டும் என்பதை கருத்தில்கொண்டு சென்னை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக தன்னார்வலர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது.

Advertisment

உலக சுகாதார அமைப்பின் பாதுகாப்பு வழிகாட்டுதல்களை பின்பற்றி இதுவரை 30க்கும் மேற்பட்டவர்களை அடக்கம் செய்துள்ளதாக பாப்புலர் ஃப்ரண்ட் தன்னார்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

Chennai corona virus issue Popular Front
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe